Published:Updated:

‘மக்களுக்கான அரசு வேண்டும்’ - அரசியலில் கால் பதித்த பிரகாஷ் ராஜ்

‘மக்களுக்கான அரசு வேண்டும்’ - அரசியலில் கால் பதித்த பிரகாஷ் ராஜ்
‘மக்களுக்கான அரசு வேண்டும்’ - அரசியலில் கால் பதித்த பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

‘மக்களுக்கான அரசு வேண்டும்’ - அரசியலில் கால் பதித்த பிரகாஷ் ராஜ்


கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பல அரசியல் ஜாம்பவான்கள் சினிமாத் துறையில் இருந்து வந்தவர்களே. அவர்கள்தான் பல வருடங்களாக தமிழகத்தில் ஆட்சிசெய்துவந்தனர்.  அவர்களுக்கு அடுத்த தலைமுறையாக நடிகர்கள் விஜயகாந்த், சீமான், சரத்குமார் போன்ற பலரும் புதிய கட்சி துவங்கி அரசியலில் இறங்கினர். கடந்த வருடம்கூட நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்து, ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அறிவித்தார். 

‘மக்களுக்கான அரசு வேண்டும்’ - அரசியலில் கால் பதித்த பிரகாஷ் ராஜ்

இவர்களின் வரிசையில், அடுத்து நடிகர் பிரகாஷ்ராஜும் அரசியலில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.  புதிய மாற்றத்துக்கான நேரம் இது. அதிக பொறுப்புகள் கூடியுள்ளன. உங்கள் அனைவரின் ஆதரவுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளேன். தொகுதி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார். 

‘மக்களுக்கான அரசு வேண்டும்’ - அரசியலில் கால் பதித்த பிரகாஷ் ராஜ்

 ‘உங்களை நாடாளுமன்ற உறுப்பினராகப் பார்க்கக் காத்திருக்கிறோம்’,  ‘உங்கள் முடிவுக்கு வாழ்த்துகள்’ எனப் பலரும் அவரின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தன் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு முன்னதாகவே, தமிழகம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டி, மக்களுக்கு ஆதரவாகப் பேசிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.