கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசித்துவந்த சர்வதேசப் பொருளாதார நிபுணர்

டாக்டர் அனந்த நாகேஸ்வரன், தற்போது சென்னைக்கு அருகே தடாவில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் (IFMR) நிறுவனத்தின் டீனாக பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்க விருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்த பொருளாதார மாற்றங்கள், சர்வதேசப் பொருளாதார நிலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இனி...

2014-ல் நமது பொருளாதாரம் இருந்ததற்கும், தற்போதைய பொருளாதாரத்துக்கும் என்ன வித்தியாசம்?

‘‘2014-ல் நமது பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. இப்போது நம் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு, நிலையானதாக மாறியிருக்கிறது. பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவை கட்டுக்குள் இருக்கின்றன. நம் நாட்டின் தர மதிப்பீடும் அதிகரித்திருக்கிறது. எளிதாகத் தொழில் தொடங்கும் சூழலை உருவாக்குவதில் மிக நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம். சாதாரண மக்களையும் பொருளாதார நடவடிக்கைகளில் கொண்டுவருவதில் மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறோம். சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம் போன்ற மிகப் பெரிய சீர்திருத்தங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் அடுத்த பல பத்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.

என்றாலும், இன்னும் பல சவால்களை நாம் சந்திக்க வேண்டும். உதாரணமாக, விவசாயத் துறையிலும், ஏற்றுமதித் துறையிலும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பல ஆண்டுகளாகவே இந்த சவால்கள் தீர்க்கப்படாமலே இருந்தாலும், இந்த அரசாங்கம் கொண்டுவந்த மண் அட்டை (soil card), பயிர் இன்ஷூரன்ஸ், இ-மார்க்கெட் போன்ற புதிய மாற்றங்களைக் கொண்டுவந்து, விவசாய உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது.

ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் விவசாய விளைபொருள்களுக்குக்கூட குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டது துரதிருஷ்டம்தான். இதேபோல, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விவசாயத்துக்கு அரசின் உதவி தேவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், விவசாயம் என்பது அதிக ரிஸ்க் கொண்டதாகவும், குறைவான வருமானம் தருவதாகவும் இருப்பதால், உற்பத்தித் துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ரயில் போக்குவரத்து, கப்பல் போக்கு வரத்து வசதிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த உள்கட்ட மைப்பு வசதிகளைப் பெருக்குவதில் இந்த அரசாங் கம் நிறைய நடவடிக்கைகளை எடுக்கவே செய்திருக்கிறது.

கல்வித் துறையில் மற்றும் சுகாதாரத் துறையிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்க வேண்டும். வருமான வரித் துறையானது கறாராக நடந்துகொள்வதை யும், பழிவாங்கும் நடவடிக்கை யும் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் உழைக்காமல் இருப்பவர் களையும், ஊழல் பேர்வழிகளையும் கண்டறிந்து அவர்களைக் களைய வேண்டும். இந்த நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் இனிதான் எடுக்க வேண்டும்!’’

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

‘‘இந்த விஷயத்தில் நான் சற்று மாறுபடு கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு வங்கிகளைத் தேசியமயமாக்கினார்கள். 1969-1989 வரையிலான இருபது ஆண்டுகளில் இதற்காகச் செய்யப்பட்ட செலவுகளைவிட கிடைத்த நன்மைகள் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்துவந்த 25 ஆண்டுகளில் வங்கிகள் மூலம் கிடைத்த நன்மைகளை விட, அவற்றுக்காகச் செய்யப் படும் செலவுகள் அதிகரித்தது. ஆக, வங்கி தேசியமயமாக்கல் சரியா என்று கேட்டால், எந்தக் காலத்தை அடிப்படை யாக வைத்துப் பார்க் கிறோமோ, அதற்கேற்ப பதில் மாறும்.

பணமதிப்பு நீக்க நட வடிக்கையும் இதுபோலத் தான். ரூ.2,000 புழக்கத்தில் இருக்கும் வரை ஊழல் ஒழியாது என்று சிலர் சொன்னாலும், சில முக்கிய மான மாற்றங்களை அது கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. உதாரண மாக, 2014-15-ல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் வரிக் கணக்குத் தாக்கல் செய்த வர்களின் எண்ணிக்கை 88,649 பேர். இதுவே, 2017-18-ல் 1,40,139 பேர்.

ஆக, பணமதிப்பு நீக்கத்துக்காக நாம் செய்த செலவைவிட நமக்குக் கிடைத்துள்ள வருமானம் அதிகம்தான். இந்த நடவடிக்கை யினால் கிராமப்புற மக்கள் சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்காமல் பாதிப்படைந்தாலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரிப் பரப்பில் வந்திருப்பதும் ஆரோக்கியமான விஷயமே. இதனால் அரசின் வருமானம் அதிகரித்து, ஏழை மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும்.’’

கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படவில்லையே. ஏன்?

‘‘இந்தத் துறையில் இன்னும் என்ன செய்திருக்கலாம் என்று எனக்குத் தெரிய வில்லை. வங்கித் துறையிலும், வர்த்தக துறையிலும் உருவான ‘இரட்டை பேலன்ஸ் ஷீட்’தான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போனதற்கு முக்கியக் காரணம். 2008-ம் ஆண்டுக்குப்பிறகு சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தணிந்துவிட்டது இரண்டாவது காரணம். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, திவால் சட்டம் ஆகியவை குறுகிய கால பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நமது ஐ.டி துறை சர்வதேச நிறுவனங்களின் போட்டி போட்டு ஜெயிக்கும் திறனை இழந்துவருவதும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போனதற்கு ஒரு காரணம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அரசின் வேலையல்ல. வேலைவாய்ப்புகள் உருவாக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்துதருவதுதான் அரசின் வேலை.’’

மத்திய அரசுக்கும், ஆர்.பி.ஐ-க்கும் இடையிலான மோதலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

‘‘இந்த மோதலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதை இரு தரப்பினருமே உணர வேண்டும். இரு தரப்பினருமே அதிக முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். பரபரப்பை ஏற்படுத்துகிற வகையில் ஆர்.பி.ஐ தரப்பில் யாரும் பேசக்கூடாது. ஆர்.பி.ஐ-யை மிரட்டாமலே சில புதிய விதிமுறைகளைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்யவேண்டும். நீண்ட கால மாற்றங்களைக் கொண்டுவர ஆர்.பி.ஐ-யை மத்திய அரசாங்கம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர்.பி.ஐ-யை வைத்து பல சீர்த்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். மத்திய அரசாங்கம் ஆர்.பி.ஐ-யுடன் மோதலில் ஈடுபட்டால், அரசாங்கத்துக்கு மிஞ்சுவது அவப்பெயர் மட்டுமே. இது அமையதியாகவும், திரை மறைவிலும், சாதுர்யமாகவும் கையாளப்பட வேண்டிய விஷயம்.’’

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும்?

‘‘இந்த ஆட்சியின் காலமானது ஏறக்குறைய முடியப்போகிற நிலையில், ஒன்றும் செய்வதற்கில்லை. தேர்தலை முன்வைத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவராது என்பதே வரலாறு உணர்த்தும் உண்மை.’’

- ஏ.ஆர்.குமார்

2019-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

‘‘அடுத்த ஆண்டில் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது மிகக் கடினமான வேலை. நம் நாட்டு நிலையையும், சர்வதேச நிலையையும் வைத்துப் பார்த்தால், அடுத்த ஆண்டு சவால் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்றேபடுகிறது. அமெரிக்க பங்குச் சந்தை இன்னும் உயர் மதிப்பீடு கொண்டதாக இருக்கிறது. எனவே, அந்தப் பங்குச் சந்தை இறக்கம் காண நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சி அமைத்து, சில நீண்ட காலச் சவால்களுக்குத் தீர்வு காணப்படும்பட்சத்தில், இந்தியப் பங்குச் சந்தைகள் உயர வாய்ப்புண்டு.’’