Published:Updated:

வாட்டி வதைக்கும் கோடை... குற்றால அருவியில் அலைமோதும் கூட்டம் (படங்கள்)

நெல்லை: கோடை வெப்பம் மக்களை வாட்டி எடுத்து வரும் நிலையில் குற்றல அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

வாட்டி வதைக்கும் கோடை... குற்றால அருவியில் அலைமோதும் கூட்டம் (படங்கள்)

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் சுற்றுலா மையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

வாட்டி வதைக்கும் கோடை... குற்றால அருவியில் அலைமோதும் கூட்டம் (படங்கள்)

கோடை வெயிலின் தாக்கம் அதிகரி்த்து இருப்பதால் குளிர்ச்சியான பகுதிகளுக்கு செல்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் பொங்க குளித்து மகிழ்கி்ன்றனர்.

வாட்டி வதைக்கும் கோடை... குற்றால அருவியில் அலைமோதும் கூட்டம் (படங்கள்)

தென்றல் காற்றுடன் கூடிய மிதமான சூழல் நிலவுவதால் கூட்டம் கூட்டமாக மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். ஐந்தருவியில் உள்ள ஒரு பிரிவில் மட்டும் தண்ணீர் கொட்டினாலும் அங்கும் கூட்டம் அலைமோதுகிறது.

வாட்டி வதைக்கும் கோடை... குற்றால அருவியில் அலைமோதும் கூட்டம் (படங்கள்)

பழைய குற்றாலத்தில் இன்னும் தண்ணீர் விழத் தொடங்கவில்லை. இருப்பினும் பாறையை ஓட்டி விழும் தண்ணீரிலும் மக்கள் உல்லாச குளியல் போடுகின்றனர்.

வாட்டி வதைக்கும் கோடை... குற்றால அருவியில் அலைமோதும் கூட்டம் (படங்கள்)

இந்தாண்டு விரைவிலேயே சீசன் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் கடைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்