Published:Updated:

'உணவுத் தேவைக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்' சொல்கிறது தானம் அறக்கட்டளை

'உணவுத் தேவைக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்' சொல்கிறது தானம் அறக்கட்டளை
'உணவுத் தேவைக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்' சொல்கிறது தானம் அறக்கட்டளை

''மேற்குவங்க மாநிலக் கிராமங்களில் வீட்டுக்கு வீடு மீன் வளர்ப்பினை ஊக்குவிப்பதுபோல் தமிழ்நாட்டிலும் ஊக்குவிப்பது அவசியம். அதிக சக்திகள் கொண்ட மீன் உணவு அனைத்து ஏழை மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்' என்று மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளையின் சார்பில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

'உணவுத் தேவைக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்' சொல்கிறது தானம் அறக்கட்டளை

தானம் வயலக கண்மாய் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பாக 'உள்நாட்டு மீன்உற்பத்தி மற்றும் கொள்கை முடிவுகள்' என்ற தலைப்பில் மீன் வளர்க்கும் விவசாயிகள் அது சார்ந்த பங்குதாரர்கள் கலந்து கொண்ட ஒரு நாள் கருத்தரங்கு தானம் அறக்கட்டளையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் பங்கேற்றுப் பேசிய அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மா.ப.வாசிமலை, 'மீன் உற்பத்தியில் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறுவதோடு, அங்குள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டிலும் மீன் வளர்ப்பு மிகப் பெரும் பங்களிக்க வேண்டும். இதற்கென்று மீன் விதைப் பண்ணைகளும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

'உணவுத் தேவைக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்' சொல்கிறது தானம் அறக்கட்டளை

ஏழை மக்களின் வாழ்வாதாரத்திலும், உடல் நலனிலும் மீன்கள் முக்கிய பங்காற்றும் சூழல் உருவாக்கப்படுதல் அவசியம். எந்தெந்த கிராமங்களில் மீன் வளர்ப்பில் சாதகமான நிலை உள்ளதோ, அங்கெல்லாம் தவறாமல் மீன் வளர்ப்பினை ஊக்குவித்தல் வேண்டும். அதேபோன்று மீன்களுக்கான நிலைத்த விற்பனைச் சந்தையை உள்ளூரில் உருவாக்குவதும் அவசியம். அனைத்து மக்களும் மீன் உணவைப் பெறும் வண்ணம் கொள்கை முடிவுகள் அரசால் வகுக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

தானம் வயலக கண்மாய்கள் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாகி குருநாதன் பேசும்போது, 'தென்னிந்தியக் கிராமங்களில் பெரும்பாலானவற்றில் உள்நாட்டு மீன் வளர்ப்பிற்கேற்ற சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. அதனைச் சரியாகப் பயன்படுத்தினால் கிராமப்புற பொருளாதாரம் கூடுதலாக வளர்ச்சியடையும். அசைவ உணவுகளில் மீன் அனைவராலும் பரிந்துரைக்கப்படுகின்ற ஒன்றாகவும், உடலுக்குத் தேவையான புரதச்சத்தினை வழங்குகின்ற உணவாகவும் மீன் திகழ்கிறது. ஆகையால் விவசாயிகள் மீன் வளர்ப்பில் தங்களின் கவனத்தைச் செலுத்த வேண்டும்' என்றார்.

'உணவுத் தேவைக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்' சொல்கிறது தானம் அறக்கட்டளை

இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்து வழிநடத்திய தானம் வயலகக் கண்மாய்கள் அறக்கட்டளையின் அணித்தலைவர் மதன் மோகன் பேசும்போது, 'தற்போது ஒடிசா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் 500 கண்மாய்களிலும், ஊருணிகளிலும், 500 க்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகளிலும் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புறப் பெண்களுக்கு மற்றுமொரு கூடுதல் வருமான வாய்ப்பாக மீன் வளர்ப்பு திகழ்கிறது. கெண்டை மீன்கள் மட்டுமன்றி, நன்னீர் இறால், விரால் மீன்கள் மற்றும் பங்கேசியஸ் போன்ற வகை மீன்களை வளர்த்து நல்ல வருமானம் ஈட்ட முடியும். இதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை தானம் வயலக கண்மாய்கள் அறக்கட்டளை வழங்கி வருகிறது' என்றார்.

##~~##
மீன் வளர்ப்பில் ஏற்படும் பிரச்னைகள், வளர்வதற்கேற்ற சூழல்களைப் பராமரித்தல், சந்தைவாய்ப்புகள், மீன் உணவு முறைகள் அதன் முக்கியத்துவம் ஆகிவை குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட  விவசாயிகள் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். மீன் வளத்துறை உதவி இயக்குநர் சேகர், மீன் வளப் பேராசிரியர்கள் முனைவர் ஜவகர் மற்றும் முனைவர் கணேஷ் ஆகியோர் விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். மீன் விதைப்பண்ணை உரிமையாளர் அகமது மைதீன் மீன் விதைப்பண்ணை அமைப்பது குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மீன் வளர்ப்பில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், கொள்கை மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது. ஊடக ஒருங்கிணைப்பாளர் இரா.சிவக்குமார் உள்ளிட்ட தானம் அறக்கட்டளை நிர்வாகிகள் இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
குளஸ்