Published:Updated:

5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை

5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை
5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை

தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் ஆன்ட்ராய்டு போன், ஐ போன் எனத் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். கை அளவு உள்ள சிறிய போனில் உலகத்தையே அடக்க முடியும் அளவுக்கு நம் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. இருப்பினும் சில விஷயங்களில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றுதான் வானொலி. நாம் என்னதான் 3டி, 4டி களில் பாடல்கள் கேட்டாலும் வானொலிகளில் பாடல்கள் கேட்பதும் தனி சுகம்தான். 

அப்படி இந்திய அரசு முதன் முதலாக அறிமுகப்படுத்திய சேனல்தான் அகில இந்திய வானொலி. தற்போது அந்த வானொலி நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இருந்தும் ஆங்காங்கே பல தனியார் வானொலி சேனல்களும் உருவெடுத்துள்ளதால் அரசு சேனல்கள் கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள சில வானொலி பயிற்சி மையங்களை மூடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

செலவுக்குறைப்பின் ஒரு பகுதியாக குஜராத்தின் அகமதாபாத், தெலங்கானாவின் ஹைதராபாத், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங் ஆகிய ஐந்து மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய வானொலி மண்டல பயிற்சி மையங்களையும் மூன்று தேசிய ஒலிபரப்பு நிலையங்களையும் நிறுத்தவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

1936-ம் ஆண்டு அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் அகில இந்திய வானொலி (All India Radio, சுருக்கமாக AIR) ஆகாஷ்வாணி நிறுவப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதன்மையான அரசுத்துறை வானொலி ஒலிபரப்பு நிறுவனம். இதன் தலைமையிடம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. தற்போது இது பிரசார் பாரதியின் அங்கமாக செயல்படுகிறது.  இதன் மூலம்தான் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி இந்திய மக்களுடன் ’மான் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.