Published:Updated:

`நரகாசுரனை அழிச்சுட்டியா; பேனரைக் கிழிச்சது யாருனு தெரியும்!’ - ஆடியோக்களால் பரபரக்கும் திருவண்ணாமலை அ.தி.மு.க

`நரகாசுரனை அழிச்சுட்டியா; பேனரைக் கிழிச்சது யாருனு தெரியும்!’ - ஆடியோக்களால் பரபரக்கும் திருவண்ணாமலை அ.தி.மு.க
`நரகாசுரனை அழிச்சுட்டியா; பேனரைக் கிழிச்சது யாருனு தெரியும்!’ - ஆடியோக்களால் பரபரக்கும் திருவண்ணாமலை அ.தி.மு.க

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வமும் தனித்தனியே பேசிக்கொள்ளும் ஆடியோக்கள் வெளியாகி, திருவண்ணாமலை அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோதான் திருவண்ணாமலை அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மத்தியில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.  

`நரகாசுரனை அழிச்சுட்டியா; பேனரைக் கிழிச்சது யாருனு தெரியும்!’ - ஆடியோக்களால் பரபரக்கும் திருவண்ணாமலை அ.தி.மு.க

வேளாண்மைத்துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில், அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியைப் பறித்துக்கொண்டு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா. பின்னர், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி 2016 மார்ச் மாதத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அக்ரியை மீண்டும் கட்சியில் சேர்க்கவே இல்லை ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, டி.டி.வி.தினகரனை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்து மாவட்டத்தில் நடக்கும் கட்சிக் கூட்டங்களில் தலைகாட்டத் தொடங்கினார். பின்பு, எடப்பாடியைச் சந்தித்து மாநில விவசாயிகள் பிரிவுச் செயலாளராக ஆனார். அந்த பொறுப்பு தந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 2018 செப்டம்பரில் அண்ணா பிறந்த நாளில் திருவண்ணாமலையில் பெரும் கூட்டத்தைக் கூட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலம் வந்தார். அப்போதே, அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், 'அக்ரி சதுரங்க விளையாட்டை ஆடத் தொடங்கிவிட்டார். கூடிய விரைவில் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிடுவார் என்று கிசுகிசுத்தனர். இந்த நிலையில்தான் டிசம்பர் 24-ம் தேதி திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் ராஜனின் மா.செ.பொறுப்பு பறிக்கப்பட்டு, அதை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கொடுத்தது அ.தி.மு.க தலைமை.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசினோம். `அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து ஜெயலலிதா மா.செ பதவியைப் பார்த்ததும் அதை ராஜனிடம் கொடுத்தார். அதோடு, 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதிக்குச் சீட்டும் கொடுத்தார்கள். அந்தச் சமயத்தில், ராஜனைப் பிடிக்காத பல அ.தி.மு.க. நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்கவே செல்லவில்லை; முழுமையான ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால், அந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார் ராஜன். அப்போதே தோல்விக்குக் காரணம் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான், அவருடைய கோஷ்டி எனக்கு ஆதரவு தரவில்லை என்று ஜெயலலிதாவுக்குப் புகார் அனுப்பினார் ராஜன்.

`நரகாசுரனை அழிச்சுட்டியா; பேனரைக் கிழிச்சது யாருனு தெரியும்!’ - ஆடியோக்களால் பரபரக்கும் திருவண்ணாமலை அ.தி.மு.க

அந்தத் தேர்தலில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் வரும் 4 தொகுதிகளில் கலசப்பாக்கம் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க வெற்றிபெற்றது. இதனால், அங்கு நின்று வெற்றிபெற்ற வீ.பன்னீர்செல்வம், தனக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பாத்தார். ஆனால் அது நடக்கவில்லை. இதனால், ராஜனுக்கும் பன்னீருக்கும் இடையே மோதல் தொடங்கியது. கலசப்பாக்கம் தொகுதி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கோட்டை என்பதால், அக்ரிக்கும் பன்னீருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி பூசல் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா காலமானார். அதன்பிறகு, மாவட்டச் செயலாளர் ராஜன் மா.செ என்ற அதிகார போதையில் நிர்வாகிகளை மதிக்காமல் தனி சாம்ராஜ்யம் நடத்தினார். அமைச்சர்கள் அரசு விழாவுக்கு வந்தாலும் என்னைக் கேட்டுத்தான் மாவட்டத்திற்கு உள்ளேயே வரவேண்டும் என்று மிரட்டத் தொடங்கினார். 

`நரகாசுரனை அழிச்சுட்டியா; பேனரைக் கிழிச்சது யாருனு தெரியும்!’ - ஆடியோக்களால் பரபரக்கும் திருவண்ணாமலை அ.தி.மு.க

இதனால், வடக்கு மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெற்கு மாவட்டத்திற்குச் சரியாகவே வருவது இல்லை. அரசு விழா என்றால் மட்டுமே வருவார். அதுவும், வந்த உடனே சென்றுவிடுவார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மாவட்ட செயலாளர் பதிவியைச் சுலபமாக வாங்கிவிடலாம் என்று நினைத்து அக்ரி, தன் விளையாட்டை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை வைத்து விளையாடினார். ராமச்சந்திரனும் அக்ரிக்கு ஆதரவாகக் கொடுத்த புகாரில் ராஜனின் மா.செ பதவி பறிக்கப்பட்டு புதிய மா.செ-வாக ராமச்சந்திரனையே நியமித்தது தலைமை. அதோடு, அமைச்சருக்காக மாவட்ட எல்லைகள் மாற்றப்பட்டதால் நிர்வாகிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், அக்ரி நினைத்து நிறைவேறியது.

இந்த நிலையில்தான், 'நரகாசுரனை அழிச்சுட்டியா' என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ ரிலீஸாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், டிஜிட்டல் பேனர் அடிக்கும் பச்சையப்பன் 'அண்ணே இப்போது சந்தோஷமா நீங்க போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் போலவே வேலையை முடிச்சுட்டேன் என்று சொல்ல, அதற்கு அக்ரி நரகாசுரனை அழிச்சுட்டியா என்கிறார். அதற்குப்
பச்சையப்பன் மா.செ பதவி நீங்க வாங்கிட்டு வருவீங்கனு எதிர்பார்த்தேன் என்று கூறிவிட்டு, அந்த ராஜன் எங்கயாவது லாரியில அடிபட்டு சாகணும் என்று சொல்ல, அதற்கு அக்ரி, அதுவும் சீக்கரம் நடக்கும் என்று சொல்கிறார்'.

`நரகாசுரனை அழிச்சுட்டியா; பேனரைக் கிழிச்சது யாருனு தெரியும்!’ - ஆடியோக்களால் பரபரக்கும் திருவண்ணாமலை அ.தி.மு.க

இந்த ஆடியோ, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனல் கக்கிக்கொண்டு இருக்க, அதற்கு முன்னதாக கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் பேசும் ஆடியோவும் ரிலீஸானது. அதில் பன்னீர்செல்வம், `என்னுடைய பேனரை கிழித்தது அக்ரி கிருஷ்ணமூர்த்திதான். எனக்குக் கிடைக்கவேண்டிய மா.செ.பதவி யாரால் கிடைக்காமல்போனது என்று எனக்குத் தெரியும். தெற்கு மாவட்டத்தில் இருக்கும் எனக்கு மா.செ.பதவி கொடுக்காமல், வடக்கு மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் ராமச்சந்திரனுக்குக் கொடுத்துவிட்டு அமைச்சருக்காக மாவட்ட எல்லைகளையும் பிரித்துவிட்டது தலைமை. இந்த ஆட்சி எவ்வளவு நாளைக்கு நீடிக்கிறது என்று பார்க்கிறேன். 60 கி.மீ அந்த பக்கம் இருக்கும் அமைச்சர் ராமச்சந்திரன் பின்னால் நான் ஓடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை...’ என்று அந்த ஆடியோ நீள்கிறது. இந்த ஆடியோவை அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர் தொப்புளான் வெளியிட்டார்.

இப்படி திருவண்ணாமலை அ.தி.மு.க-வில் மோதலை உருவாக்கியது அக்ரி கிருஷ்ணமூர்த்திதான். அவர் நினைத்தபடியே எல்லாம் சரியாக நடந்துவருகிறது. வரும் எம்.பி தேர்தலுக்கு முன் தெற்கு மாவட்ட மா.செ.பதவியை அக்ரி வாங்கிவிடுவார். பின்பு திருவண்ணாமலை எம்.பி சீட்டையும் வாங்கிவிடுவார் என்று உறுதியாகச் சொல்கிறனர் விவரம் அறிந்த நிர்வாகிகள். 

இதுதொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் விளக்கம் பெற முயற்சித்தோம். ஆனால், அவர்கள் தரப்பில் நமது அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.