பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்

Senthil Arumugam
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கர்நாடகத்தின்மீது காட்டும் கரிசனத்தை, தமிழகம்மீது திருப்பமாட்டார்கள். காரணம், அனைவருக்கும் தெரியும். கர்நாடகத்தில் காங்கிரஸோ, பி.ஜே.பி-யோ ஆட்சிக் கட்டிலில் அமரமுடியும். தமிழகத்தில் கூட்டணிக் கட்சியாகவோ, தோழமைக் கட்சியாகவோதான் தொடரமுடியும். ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கும் மாநிலத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என்பதுதான், காவிரி அரசியலின் முக்கியமானதோர் அம்சம்!

Ra Vinoth

சாதிவெறியில் காதலர்கள், தம்பதிகள் கொல்லப்படுவது அன்றாட செய்தி ஆகிவிட்டது. தமிழகத்தில் ஜனநாயக, முற்போக்கு, மக்கள் அமைப்புகள், கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் தோல்வியடைந்துவிட்டன. ‘சாதி வெறி கொலைகள் நடக்கவே இல்லை’ என அரசு சொல்வதும், ‘அங்கொன்றும் இங்கொன்றும்’ நடப்பதாக நூற்றாண்டு கண்ட தி.க மழுப்புவதும், பலமுறை ஆண்ட தி.மு.க சாதி வாக்கு வங்கியை மனதில்வைத்து உருப்படியாகச் செயல்படாமல் இருப்பதும் சகிக்க முடியவில்லை.

Amutha suresh
இந்திய மாநிலங்கள் கொடுக்கும் வரிகளில், திரும்பவும் மாநிலத்துக்கே பிரித்துக்கொடுக்கும் விகிதாச்சாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம், மகாராஷ்டிரா தொடங்கி குஜராத் வரை முதல் ஏழு இடங்களில், பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களும், வட இந்திய மாநிலங்களும் வரி ஈட்டுவதில் பெரும் பங்கு வகித்தாலும், மத்திய அரசிடம் இருந்து அம்மாநிலங்கள் திரும்பப்பெறும் அளவு அந்த மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொறுத்து இருக்கிறது. அதாவது, தமிழகத்தின் ஒரு ரூபாய்க்கு தமிழகம் திரும்பப்பெறுவது 40 பைசா. கர்நாடகவுக்கு 47 பைசாவும், கேரளத்துக்கு 25 பைசாவும் மக்கள் தொகைக்கேற்ப கிடைக்கும் வேளையில், உபி பெறுவது 1.79 காசுகள், அதாவது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாமல், மக்கள் நலனைப் பற்றிக் கவலைகொள்ளாமல் இருக்கும் மாநிலத்துக்கு மத்திய அரசு அதிக சலுகைத் தருகிறது. வருமான கணக்குக்கு மக்கள் தொகையை உ.பி-யிலும் பீகாரிலும் கூட்டிவிட்டு, இப்போது தமிழகத்தில் குடிபெயர்கிறார்கள். இது என்ன மாதிரியான டிசைன்?

ஆஹான்

ஆன்மன்
இதைவிடக் கொடுமையான பேரழிவைச் சந்தித்த கேரளத்தில் பலநாள்கள் களப் பணியாற்றியிருக்கிறேன். கண் முன் ஒரு முன்னேற்றம் தினமும் தெரிந்துகொண்டே இருந்தது. ஆனால், டெல்டா நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்திக்கிறது. கடும் மனஉளைச்சல் உண்டாகி விட்டது. மக்களின் மானமும் உயிரும் வாழ்வாதாரமும் பற்றி கவலைப்படாத நிறுவனத்துக்குப் பெயர்தான் அரசா?

idumbaikarthi

கஜா புயல் ஏற்படுத்தியப்  பேரழிவு,
காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை,
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி,
13 மாவட்டங்களில் விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டம்,
எழுவர் விடுதலையைத் தடுத்து அரசியல் செய்யும் மத்திய உள்துறை அமைச்சகம்... 
# சிக்கல்கள் சூழ் தமிழகம்!

ஆஹான்

rahimgazali
முதல் பிரதமராக நேருவுக்கு பதில் படேல் வந்திருந்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்! - மோடி

படேலுக்கு சிலை செய்த பணத்தை விவசாயிகளுக்கு நிவாரணமாகக் கொடுத்திருந்தாலும், விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

Thaadikkaran

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும் - திண்டுக்கல் சீனிவாசன்

# கனெக்‌ஷன் கொடுக்க ராக்கெட்ல போகச் சொல்வாரோ!

ஆஹான்

19SIVA25
பா.ஜ.க-வில் சேர்ந்தால் ஒழுக்கம் தானாக வந்துவிடும் - பொன்னார்

# மைக்கை காயத்ரிகிட்ட கொடுங்க!? சொல்லுமா போலீஸ் எதுக்குப் புடிச்சதுன்னு?

Annaiinpillai
பி.ஜே.பி சார்பில் இடைத்தேர்தல் தொகுதிகளுக்குப் பார்வையாளர்கள் நியமனம்!

# அடேய் இது கிரிக்கெட் மேட்ச் இல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு