Published:Updated:

`அ.தி.மு.க வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும்' − தேனியில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

`அ.தி.மு.க வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும்' − தேனியில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!
`அ.தி.மு.க வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும்' − தேனியில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து, தேர்தல் வேலைகளில் பரபரப்பாக இருக்கும் சூழலில், அ.தி.மு.க வேட்பாளரின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் தின திருநாளை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுப்பொருள்கள் வழங்கும் விழா இன்று தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பத்திரிக்கையாளர்களை தவிர்த்துவிட்டு வேகமாக சென்றுவிடும் ஓ.பி.எஸ், இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், "திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பெயர், நாளை காலை கட்சி தலைமை கழகத்தில் அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றியை பெறும். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

திருவாரூர் தொகுதிக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெறும்" என்றார். முன்னதாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள வாஞ்சிநாத சுவாமி கோவிலில் குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்த அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை, "இதுவரை 52 பேர் வேட்பாளர் விருப்பமனு அளித்திருக்கிறார்கள். வருகின்ற 10ம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கப்படும்" என்றார். அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை கூறியபடி 10ம் தேதி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கூறியது போல நாளை வேட்பாளர் அறிவிக்கபடுவாரா என அ.தி.மு.க வட்டாரமே குழப்பதில் ஆழ்ந்துள்ளது.