Published:Updated:

‘கேரளத்தை கொலைக்களம் ஆக்குவதா?’ - ரமேஷ் சென்னிதலா விளாசல்

‘கேரளத்தை கொலைக்களம் ஆக்குவதா?’ - ரமேஷ் சென்னிதலா விளாசல்
‘கேரளத்தை கொலைக்களம் ஆக்குவதா?’ - ரமேஷ் சென்னிதலா விளாசல்

அமைதியை ஏற்படுத்தும் கடமை முதல்வர் பினராயி விஜயனுக்கு உண்டு என்பதை மறந்துவிட்டு, கட்சியின் செயலாளர் போன்று தரம் தாழ்ந்து செயல்படுகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியும் இணைந்து, கேரளத்தை கொலைக்களமாக மாற்ற முயல்கிறது என கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார்.

‘கேரளத்தை கொலைக்களம் ஆக்குவதா?’ - ரமேஷ் சென்னிதலா விளாசல்

கேரள மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கொச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கேரளத்தின் அமைதி தகர்ந்துவிட்டது. அக்கிரமங்களை ஒடுக்குவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. அமைதியை நிலை நாட்டுவதற்குப் பதில் கலவரத்தைத் தூண்டும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி-யின் அக்கிரமங்களைத் தடுப்பதில் காவல்துறை தோற்றுவிட்டது. சி.பி.எம் தலைமையிலும் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் சமாதனத்தை விரும்புகிறார்கள். ஆனால் சி.பி.எம் மற்றும் பா.ஜ.க-வும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

‘கேரளத்தை கொலைக்களம் ஆக்குவதா?’ - ரமேஷ் சென்னிதலா விளாசல்

அமைதியை ஏற்படுத்தும் கடமை முதல்வர் பினராயி விஜயனுக்கு உண்டு என்பதை மறந்துவிட்டு, கட்சியின் செயலாளர் போன்று தரம் தாழ்ந்து செயல்படுகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியும் இணைந்து கேரளத்தை கொலைக்களமாக மாற்ற முயல்கிறது. பேராம்பிறையில், இஸ்லாமியப் பள்ளிவாசல்மீது தாக்குதல் நடத்திய சி.பி.எம் கிளைச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.எம், பா.ஜ.க சேர்ந்து கேரளத்தில் மத பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றன. சபரிமலை விவகாரத்தில் தீர்வு ஏற்பட, சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்" என்றார்.