Published:Updated:

``கிரிஜா வைத்தியநாதன் கடிதம்!’’ -இடைத்தேர்தல் ரத்துகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

``கிரிஜா வைத்தியநாதன் கடிதம்!’’ -இடைத்தேர்தல் ரத்துகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
``கிரிஜா வைத்தியநாதன் கடிதம்!’’ -இடைத்தேர்தல் ரத்துகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை இன்று காலை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்திருந்தது. இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. 

``கிரிஜா வைத்தியநாதன் கடிதம்!’’ -இடைத்தேர்தல் ரத்துகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 28-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்வதாக அறிவித்தது. மாநில தேர்தல் ஆணையமும், மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்படுவதாகவும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தேர்தல் ரத்து தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவந்தன. சில கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

``கிரிஜா வைத்தியநாதன் கடிதம்!’’ -இடைத்தேர்தல் ரத்துகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்


அதில், ‘வரும் ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டிசம்பர் 3-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்குக்  கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில், இயல்புநிலை திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்பதால், ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தலைமைச் செயலாளர் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மேலும் திருப்பரங்குன்றம் தவிர மற்ற 19 தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை தேர்தல் வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புயல் நிவாரணப் பணிகள்குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சரியான நேரம் வரும்போது நேர்மையாகவும் அமைதியாகவும் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

``கிரிஜா வைத்தியநாதன் கடிதம்!’’ -இடைத்தேர்தல் ரத்துகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ரத்துசெய்யப்பட்டதுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழசை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்ற பல அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும்,  ‘திருவாரூர் இடைத்தேர்தலை ரத்துசெய்த தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள். காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்திடம்  தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

டிசம்பர் 3-ம் தேதி தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஏன் டிசம்பர் 31-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது? அப்போதே இதை நிறுத்தியிருக்கலாமே எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.