Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐ.பி.எல் வீரர்கள் டிரான்ஸ்ஃபர் முடிந்திருக்கிறது. சிலபல மாற்றங்களுக்குப் பின் இப்போது எல்லா அணிகளிலும் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. அதை, கச்சிதமாக நிரப்ப சில புதுமுகங்களைக் களமிறக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

ஐடியா அய்யனாரு!

டெல்லி டேர்டெவில்ஸ்

ந்த அணிக்குப் புதிதாக இரு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெரிய காரணமெல்லாம் எதுவுமில்லை. டெல்லி மேனேஜ்மென்ட் சொல்வதை அப்படியே கேட்பார்கள் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும்தான்.

எடப்பாடி பிடல் எட்வர்ட்ஸ்
அரசியல் ஆட்டத்தில் இறங்கியது முதல், சில ஆண்டுகள் மூன்றாவது வீரராகக் களமிறங்கியவர். இப்போது ஓப்பனிங் ஆளாக இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அந்த இடம் பறிபோகும் வாய்ப்பிருப்பதால், அதைத் தக்கவைக்க நன்றாக ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.

சே பன்னீர் பெர்னாண்டஸ்
எப்போதுமே இரண்டாவதாகக் களம் இறங்குபவர், கேப்டன் இல்லாத காலங்களில் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருக்கிறது. இப்போது டெல்லி டீமை விட்டால் வேறு வழியில்லை என்பதால் இங்கிருக்கிறார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்


ந்த அணிக்கு எடுக்கப்பட்டுள்ள புது வீரர் நியாயமாக சி.எஸ்.கே அணியில்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அங்கே தமிழ் வீரர்கள் ஒருவர்கூட இல்லாத காரணத்தால், எளிய தமிழ்ப் பிள்ளை தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த அணியில் இணைந்துள்ளார்.

சவுரவ் சீமான்
மின்னல் வேகத்தில் இங்கிருந்து இலங்கை வரை ஓடக்கூடியவர். ‘நம்ம டீம் ஜெயிக்க என்ன பண்ணலாம்’ என்று இவர் காட்டும் அதிரடி பில்ட் அப்களாலே எதிரணியினர் மிரண்டுவிடுவார்கள் என்பதால், இவர் டீமில் தவிர்க்க முடியாதவராகிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ந்த அணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள வீரர் உள்ளூர்க்காரர் என்பதால் பிட்ச், தட்பவெப்பநிலை பற்றியெல்லாம் தெரிந்து ஆடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது அணி நிர்வாகம்.

விவ் ரஜினி ரிச்சர்ட்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் அணி பல ஆண்டுகளாக ஆடிவந்தாலும், ‘எப்பய்யா கப்பு ஜெயிப்பீங்க?’ எனக் கேட்க வைத்துக்கொண்டே இருக்கும். புது வீரரும், ‘எப்ப ஜெயிப்பேன் எப்படி ஜெயிப்பேன்னு தெரியாது. ஆனா, ஜெயிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா ஜெயிப்பேன்’ என்று கேட்க வைத்துக்கொண்டே இருப்பார். இந்த ஒற்றுமை போதுமே!

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

ந்த அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர் சென்னை அணியின் தீவிர விசுவாசி. ஆனால், ஹைதராபாத் அணி குடும்பத்துக்கு நெருக்கமானது என்பதால், அங்கே ஆடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் உதயநிதி வாக்
வளர்ந்துவரும் வீரர் என்பதால், இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. ஆனால், எதிர்காலத்தில் மூன்றாம் கேப்டனாகும் கனவும் ஆசையும் இருப்பதால், இப்போதிருந்தே அணியில் இடம்பெற்று பயிற்சி பெறுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism