Published:Updated:

`எங்க மக்கள் பாதிக்கப்படுவாங்க!' - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க பா.ம.க எதிர்ப்பு

`எங்க மக்கள் பாதிக்கப்படுவாங்க!' - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க பா.ம.க எதிர்ப்பு
`எங்க மக்கள் பாதிக்கப்படுவாங்க!' - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க பா.ம.க எதிர்ப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலம் டு சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் எண் 22154, 22153 என்ற ஒரு ரயில் இயங்கிவருகிறது. இந்த ரயிலை சேலத்தில் இருந்து கரூர் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதை எதிர்த்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

`எங்க மக்கள் பாதிக்கப்படுவாங்க!' - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க பா.ம.க எதிர்ப்பு

இப்போராட்டத்துக்கு தலைமைதாங்கிய பா.ம.க மாநில துணைத் தலைவர் அருள், ''சேலத்தைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள சேலம் மாவட்ட மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியின் பெரு முயற்சியால், ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சர் வேலு, 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் சேலம் டு சென்னை எழும்பூர் ரயில் கொண்டு வரப்பட்டு, ரயில்வே சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

`எங்க மக்கள் பாதிக்கப்படுவாங்க!' - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க பா.ம.க எதிர்ப்பு

சேலம் கோட்டத்தின் தலைமை இடமாக சேலத்திலிருந்து இயங்கும் ஒரே ரயில் இதுவே. இந்த ரயில், சேலம் மாவட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சேலத்திலேயே அனைத்து சீட்டுகளும் நிறைந்து விடுகின்றன. இந்த நிலையில், இந்த ரயிலை கரூருக்கு நீட்டித்தால், அந்த ரயில் அங்கேயே முழுவதும் நிரம்பிவிடும். சேலம் மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய இடையூறாக அமையும். ஆகவே, இந்த ரயிலை கரூருக்கு நீட்டிக்கக் கூடாது.

கரூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெற, கரூர் முதல்  சென்னை வரை சேலம் வழியாக ஒரு ரயிலை இயக்க வேண்டும். ஆனால் ரயில்வே நிர்வாகம், சேலம் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இந்த ரயிலை கரூர் வரை நீட்டிப்பு செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறது. எங்க உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கரூர் வரை நீட்டிப்பு செய்தால், ரயிலை இயக்க விடமாட்டோம்'' என்றார்.