Published:Updated:

ஸ்டாலின் வரவேற்பு பேனருக்கு தீ: தர்மபுரியில் பரபரப்பு

ஸ்டாலின் வரவேற்பு பேனருக்கு தீ: தர்மபுரியில் பரபரப்பு
ஸ்டாலின் வரவேற்பு பேனருக்கு தீ: தர்மபுரியில் பரபரப்பு
ஸ்டாலின் வரவேற்பு பேனருக்கு தீ: தர்மபுரியில் பரபரப்பு

தர்மபுரி: தர்மபுரிக்கு இன்று வரவிருக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதை நேற்றிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் இன்று தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் நடக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக செய்து வந்தனர்.

தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கும் பெரியாம்பட்டியில் கூட்டம் நடப்பதால் சாலையின் இருபுறங்களிலும் ஸ்டாலினை வரவேற்கும் பேனர்கள் அமர்க்களப்பட்டது. இப்படி வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனர்களில் சிலவற்றை நேற்றிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தியிருந்தனர்.  இதையறிந்த தி.மு.க.வினர் கொதிப்படைந்ததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும், ‘நிகழ்ச்சிக்கான பணிகள் நிறைய இருப்பதால் கட்சியினர் இது தொடர்பாக யாரிடமும் எந்த பிரச்னைகளிலும் ஈடுபட வேண்டாம்’ என்று மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதால் தொண்டர்கள் அமைதியாகச் சென்றனர்.

##~~##
‘பா.ம.க.வைச் சேர்ந்த வன்முறை கும்பல் தான் பேனர்களை சேதப்படுத்தியிருக்கும்’ என்ற பேச்சு இருந்தபோதும் யாரையும் குறிப்பிட்டு தி.மு.க.வினர் புகார் கொடுக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக காரிமங்கலம் போலீஸாருக்கு தகவலை மட்டும் தெரிவித்துவிட்டு புதிய பேனர்களை கட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். ஆனாலும், தி.மு.க.வினர் மத்தியில் இன்னும் கோபம் முழுமையாக தணியவில்லை.
எஸ்.ராஜாசெல்லம்