Published:Updated:

`குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயாரா?' - கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

`குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயாரா?' - கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி
`குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயாரா?' - கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

உள்ளாட்சி தேர்தல் மற்றும் கொடநாடு விவகாரம் போன்றவை குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

`குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயாரா?' - கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

அவர் பேசியதாவது, “ 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது தி.மு.கதான். அதில் மதுரையில் உள்ள பாப்பாபட்டி, கீரிபட்டி உள்ளிட்ட 3 கிராமங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் என 4 ஊராட்சிகளில் பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் இந்தப் பகுதிகளில் உள்ள மக்களிடம் பேசி சுமுகமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அது நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோதுதான் நடத்தப்பட்டது. இதை முதல்வருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் உள்ளாட்சி துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் மற்றும் நிதி வழங்க வேண்டும் என எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு 99 பரிந்துரைகளை அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் வழங்கிச் செயல்படுத்தினோம். 

அதேபோல் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகளின் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற நடைமுறை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதுதான் செயல்படுத்தப்பட்டது. கிராமங்களில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அனைத்து ஊராட்சிகளிலும் நூலகங்கள் திறக்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை  நிறைவேற்றப்பட்டது. 

`குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயாரா?' - கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கக் காரணம் தி.மு.க வழக்குத் தொடர்ந்தது தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அவரது சகாக்களும் திட்டமிட்டு பொய்யைப் பரப்பி வருகிறார்கள். தி.மு.க வழக்கு போட்டது உண்மைதான். ஆனால், அது தேர்தலை நிறுத்துவதற்காக அல்ல. தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. இட ஒதுக்கீடுகளை முழுமையாக நிறைவேற்றாமல் தேர்தல் நடத்த முயற்சி செய்தனர் அந்த நேரத்தில்தான் தேர்தலை முறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றத்துக்குச் செல்ல நேரிட்டது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் எந்த உத்தரவுகளுக்கும் இந்த ஆட்சி பயப்படவில்லை.  நான் முதல்வர் இல்லை, என்னுடைய கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையமும் இல்லை எனவே தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு யார் காரணம் என நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாட்டில் உள்ள பங்களா. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாடு பங்களாவில் மர்மமான கொலைகள், கொள்ளைகள், தற்கொலைகள், விபத்துகள் போன்றவை நிகழ்ந்தன. இதில் குறிப்பாக கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். அதேபோல் அதே பங்களாவில் சிசிடிவி ஆப்பரேட்டராக இருந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜால் கொள்ளையடிக்க நியமிக்கப்பட்ட சயனின் மனைவி மற்றும் மகளும் விபத்தில் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து வந்தது. இதைத்தான் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்  மேத்யூஸ் விசாரணை நடத்தியுள்ளார். இதையே ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டார். 

`குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயாரா?' - கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

கொடநாடு கொலைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியே நடந்தது என மேத்யூஸ் சொல்லியுள்ளார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர், மேத்யூஸின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை. அந்த பேட்டியில் இருந்து கொடநாடு சம்பவத்தில் முழு குற்றவாளி அவர்தான் என மிகத் தெளிவாக தெரிகிறது. சயன், கனகராஜை தனக்குத் தெரியாது, கனகராஜின் மரணம் விபத்து போன்ற எந்த விளக்கத்தையும் அவர் கூறவில்லை. பொதுவாக இதற்கு அரசியல் பழிவாங்கலே காரணம் கூறிவிட்டார். கொலை புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயாரா?. மேத்யூஸ்  கூறுவது பொய் என்றால் அவர் மீது ஏன் வழக்கு தொடரவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஆளுநருக்கும் குடியரசு தலைவருக்கும் கடிதம் அனுப்பப்படும். இதில் முதல்வர், சசிகலா குடும்பத்தினர் போன்ற பலரையும் விசாரிக்க வேண்டும். இல்லையேல் தி.மு.க சார்பில் வழக்குத் தொடரப்படும்’’என்றார்.