Published:Updated:

`குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!’ - கலக்கும் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்

`குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!’ - கலக்கும் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்
`குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!’ - கலக்கும் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் திட்டத்தை சிக்கிம் மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்துள்ளார். 

கடந்த ஆண்டு சிக்கிம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' என்னும் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் பவன் சாம்லிங். அறிவித்ததைப் போலவே அதை தற்போது செயல்படுத்தியுள்ளார். காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர் தகுதிக்கேற்றபடி அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து புதிய வாக்குறுதிகளை சாம்லிங் அளித்துள்ளார். அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யுபிஐ (UBI) எனப்படும் இலவச அடிப்படை மாத ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு இல்லாதது, முதியவர்கள், ஆதரவற்றோர் எனப் பல காரணங்களுக்காக வழங்கப்படும் மாத ஊக்கத் தொகையை தவிர, தனிநபர் ஒவ்வொருவருக்கும் இந்தத் தொகை அடிப்படை ஊதியமாக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தனி மனிதர்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் அத்தியாவசிய செலவை கணிக்கிட்டு அதை அரசே வங்கிக் கணக்கில் செலுத்துவதுதான் இந்தத் திட்டம். சிக்கிம் மாநிலத்தில் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பவன் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, அம்மாநிலத்தில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவர் முதல்வர் பதவி வகித்து வருகிறார்.