Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

ஆஹான்

Published:Updated:
ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்

Murugan Thi
அனுமனின் சாதியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவே தாங்கள் ஆட்சிக்கு வந்ததாக உ.பி பி.ஜே.பி அரசு நினைக்கிறது. ‘அனுமன் தலித்’ என்று சமீபத்தில் சொன்னார் முதல்வர் யோகி ஆதித்யநாத். ‘அடுத்தவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்கள், ஜாட் ஜாதியினர்தான். அனுமன் அந்த ஜாதிதான்’ என்று சொல்லியிருக்கிறார் உ.பி அமைச்சர் லட்சுமி நாராயண் சௌத்ரி. ‘ரஹ்மான், ரம்ஜான் என்பவை போலவே பெயர் இருப்பதால், அனுமன் முஸ்லிம்’ என்று சொன்னார் ஆளுங்கட்சி எம்.எல்.சி பக்கல் நவாப். சட்ட மேலவையிலும் இதை விவாதித்திருக்கிறார்கள்.

ஆஹான்

பி.கு: இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் அதிகம் இருப்பது உத்தரப் பிரதேசத்தில்தான் என்கிறது குளோபல் நியூட்ரிஷன் ரிப்போர்ட். அனுமன் ஆராய்ச்சியில் பிஸியாக இருந்த யோகி, அநேகமாக அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை.

பொம்மையா முருகன்
நம்மள மாதிரி மிடில்கிளாஸ்க்கு கடன் தள்ளுபடி கிடையாது. அவனும் தள்ளுபடி கேட்கமாட்டான். ஏன்னா கடனைத் தள்ளுபடி செஞ்சா அல்லது ஒழுங்கா கட்டலன்னா சிபில் ஸ்கோர் போயிடும். பின்னாடி அவசரத்துக்கு அஞ்சு பத்து வாங்கமுடியாதுன்னும் அந்த மிடில்கிளாசுக்குத் தெரியும்.

ஆஹான்

sundartsp
அரசு ‘எய்ட்’ குடுப்பதோடு எய்ட்ஸையும் கொடுக்கிறது!

savukku
அ.இ.அ.தி.மு.க புது விளக்கம்.....
‘அ’ப்போலோ
‘இ’ட்லிய
‘அ’ம்மாவ
‘தி’ங்கவெச்சி
‘மு’டிச்ச
‘க’ழகம்!

ajmalnksMore
மறப்போம்; மன்னிப்போம் என்பதே
அ.தி.மு.க-வின் கொள்கை - ஜெயக்குமார் 
நீங்கதான் எல்லாத்தையும் மறந்து பல வருஷமாச்சுன்னு தெரியுமே!

ajmalnks
பிளாஸ்டிக் தடையால் இழந்த மரியாதையைத் திரும்பப் பெறத் தயாராகிக் கொண்டிருக்கிறது வாழை இலை.

kathir_twits
இனி ரத்தம் ஏற்றினால் HIV ஞாபகம் வரும் நிலைமையை ஏற்படுத்திவிட்டது தமிழக அரசு!

gips_twitz
தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணிக்கு 30 இடங்கள் கிடைக்கும் - பொன்னார்
அடேங்கப்பா கூட்டணி கட்சிக்கே 30 இடங்கள் தராங்கன்னா பெரிய ஆளுங்கதான்

ArunkumarTNR
உ.பி-யில் தெருக்களில் திரியும் பசுக்களுக்குச் சிறந்த தங்குமிட வசதி அமைக்க யோகி உத்தரவு
அடேய், இங்க கஜா புயலால் பாதித்த பல குடும்பங்கள் வீடு இல்லாமல் ரோட்டில் தூங்குறாங்க.

ஆஹான்

kumarfaculty
தி.மு.க-வுடன் லட்சிய தி.மு.க கூட்டணி வைக்காது - டி.ராஜேந்தர் பேட்டி
இனி தி.மு.க-வின் எதிர்காலம் கேள்விக்குறிதான்!

twittornewton
ஒரே நாளில் எல்லோருடைய அக்கவுண்ட்லயும் 15 லட்சம் போட்டால் பண வீக்கம் அதிகரித்துவிடும் என்றாவது லாஜிக்கலாக, ஒரு பொய் சொல்லி இருக்கலாம்.