Published:Updated:

`நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும்’ -ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

`நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும்’ -ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
`நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும்’ -ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``நாட்டின் அனைத்துப் பின்தங்கிய பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் தற்போதைய இலக்கு" என அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.

]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோட்ட அளவிலான மாநாடு திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மத்தியில் பேசிய அவர், "சூரியனை வழிபடுவதும், பசுக்களை வழிபடுவதும் நமது பாரம்பரியங்களில் அடங்கியிருக்கிறது. அதையொட்டியே நாம் பொங்கல் திருவிழாக்களைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில், நம் சமுதாயத்தில் தொடர்ந்து நிலவிவரும் குறைபாடுகளை நீக்கிட, நாட்டின் முன்னேற்றத்துக்காக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிப்போம் என நாம் உறுதியேற்க வேண்டும்.

நல்ல சிந்தனையாளர்களை நம்முடன் இணைத்துக் கொள்வதும், ஒட்டுமொத்த தேசத்தை ஒன்றிணைப்பதுமே நம் சங்கத்தின் கடமை. நம்முடைய பார்வையில் நமக்கு வேண்டாதவர்கள் என்று யாருமே கிடையாது. அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடனேயே செயல்பட்டு, நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும். இதுவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் லட்சியம். இன்றைய தேதியில், நமது சங்கத்தின் கிளையோ அல்லது சங்கத்தின் தொடர்புகளோ இல்லாத கிராமங்களே நாட்டில் இல்லை என்ற நிலையை நோக்கி நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து பின்தங்கிய பகுதிகளிலும் நமது சங்கத்தின் தினசரி கிளையான ஷாகாவை நடத்த வேண்டும் என்பதே நமது தற்போதைய இலக்காகவும் இருக்கிறது. அதை நினைவுபடுத்துவதற்கே நான் இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.