Published:Updated:

`ஸ்டாலினின் போலி விளம்பரம்!’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்

`ஸ்டாலினின் போலி விளம்பரம்!’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்
`ஸ்டாலினின் போலி விளம்பரம்!’ - கிராமசபை குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்

``ஆளுங்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் கிராம மக்களைச் சந்தித்ததில்லை. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் போலி விளம்பரத்துக்காகக் கிராம சபையைக் கூட்டி இருக்கிறார்’’ என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் மேம்பால அடிக்கல் நாட்டு விழா மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். ``ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரின் ஆணைப்படி நாங்கள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயல்படுத்தினோம்.

கிராமப்புற மக்களுக்கு இந்த அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. கடந்த முறை உள்ளாட்சி அமைச்சராக ஸ்டாலின் இருந்தார். அவர் எத்தனை கிராமங்களுக்குச் சென்றார். எத்தனை மக்களைச் சந்தித்தார். அவர் எங்கேயும் போகவில்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோதும் கிராம மக்களைச் சந்தித்ததில்லை. தற்போது எதிர்க்கட்சியாக இருந்த இந்த 3 ஆண்டுகளும் மக்களைச் சந்திக்கவில்லை. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் போலி விளம்பரத்துக்காகக் கிராம சபையைக் கூட்டி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் கிராமம் முதல் நகர்ப் புறம் வரை மக்கள் நலத்திட்டங்கள் சமமாகப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே கட்சி தொடங்கினார். தி.மு.க, கிராம மக்களுக்கு ஏதாவது ஒன்று செய்ததைச் சொல்ல முடியுமா. நாங்கள் திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மாணவர்களுக்கு மடிக்கணினி, கிராம மக்களுக்கு ஆடு, மாடு, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவித் தொகை, குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம், மக்களுக்கு மருத்துவ வசதி,

இதையெல்லாம்விடச் சேலம் விவசாயிகளைக் கௌரவிக்கும் விதமாகத் தலைவாசலில் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் அமைய இருக்கிறது. இந்த சேலம் டு செங்கம்பள்ளி வரை 4 வழிச் சாலையாக இருப்பதை 8 வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும். 8 வழிச் சாலையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். எதிர்க்கட்சிகள் தவறான தகவல் பரப்பி வருகிறது. அதைத் தவிடு பொடி ஆக்குவோம்'' என்றார்.