Published:Updated:

90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்
90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தால்  90 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற இலங்கையின் எச்சரிக்கையால், மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு நிம்மதியாக மீன் பிடிக்க செல்ல முடியுமா என்ற அச்சம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே எழுந்துள்ளது.
 

90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி வரையிலான கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் இன பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் இந்த தடைகாலம் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்கியது.
 

90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

இந்தநிலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இதே போல் காரைக்கால் மீன்வர்கள் 26 பேரும் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படும் தமிழக மீனவர்கள் வழக்கமாக சில தினங்களிலேயே விடுவிக்கப்படுவார்கள். ஆனால் கடந்த முறை பிடிபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் சுமார் ஒருமாத கால சிறைவாசத்திற்கு பின் கடந்த 8ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். ஆனால் காரைக்கால் மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
 

90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி வந்த மீனவர்களிடம், ‘‘இனி எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தால் இலங்கை சட்டப்படி 90 நாட்கள் வரை கண்டிப்பாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் எங்கள் நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்க போகிறோம். அதே நிலை உங்களுக்கும் ஏற்படும். எனவே இனி எல்லை தாண்டி மீன்பிடிக்க வராதீர்கள்’’ என இலங்கை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் இலங்கை பத்திரிக்கைகளிலும் வெளியாகியுள்ளது.
 

90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

இலங்கை அதிகாரிகளின் எச்சரிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர் சங்க கூட்டம் என்.ஜே போஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு, எமரிட், சந்தியாகு உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலங்கை அரசு மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி தற்போதுள்ள மீன்பிடி தடைகாலம் இம்மாதம் 29ஆம் தேதியுடன் முடிகிறது. மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் தொந்தரவு ஏற்படாதவாறு மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

90 நாள் சிறை: இலங்கை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

மேலும் இதனை வலியுறுத்த  தமிழக முதல்வரை நேரில் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. மத்திய - மாநில அரசுகள் மீனவர்களுக்கு உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே தடை காலம் முடிந்து மீன் பிடிக்க செல்வது எனவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக , 30 மீனவர்கள் விடுதலையாவதற்கு உதவிய இலங்கை அமைச்சர்கள் ஆறுமுக தொண்டமான், செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

##~~##
45 நாட்கள் தொடர்ச்சியாக மீன்பிடிக்க செல்ல முடியாமல்  தவித்த மீனவர்கள் தடைகாலம் முடியும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இலங்கை அரசின் தற்போதைய எச்சரிக்கையால் அந்த ஆவல் அச்சமாக மாறியுள்ளது.
இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி