Published:Updated:

`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை!

`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை!
`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை!

"தமிழகத்தில் காலூன்றி விட்டீர்களா என்று மற்ற கட்சிகளைப் பார்த்து கேட்பதில்லை. நாங்கள் வளர்ந்துவருவதால்தான் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்" என்று மதுரை வந்த பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை கூறினார்.

`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அதோடு, தேர்தல் பிரசார கூட்டத்தையும் மதுரையிலிருந்து தொடங்குகிறார். கட்சி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு, விமான நிலையம் அருகில் மண்டேலா நகரில் இடம் பார்க்கப்பட்டுள்ளது. இன்று, அந்த இடத்தில் கால்கோள் விழா மற்றும் பூமி பூஜை  நடந்தது. அதில் கலந்துகொண்ட தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும்போது, "ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறிய மு.க.ஸ்டாலின், நேற்று நடந்த கூட்டத்தில் அதை மீண்டும் கூறவில்லை. பெரியாரைப் பற்றி பேசும் ஸ்டாலின், வங்காளத்தில் விவேகானந்தரைப் பற்றி பேசியுள்ளார். இதுதான் பி.ஜே.பி-க்கு கிடைத்த வெற்றி.

மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிட்டதா என்று கேட்கிறார்கள். இன்றுதான் பந்தக்கால் ஊன்றியிருக்கிறோம். இனி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்" என்றார்.