Published:Updated:

சேது திட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்

சேது திட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்
சேது திட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பதற்காக கட்சி பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரையும் வைகோ ஒருங்கிணைத்ததுபோல், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவதற்காக அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளர் பெரியசாமி.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் செழித்தோங்கும் என சொல்லாத அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இல்லை. இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகம் அபார வளர்ச்சியை பெறும். வட மாநிலங்களிலுள்ள துறைமுகத்துக்கு போகாமலே நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பல்கள் வரலாம். இந்த நிலையில்தான் ராமர் பாலம் சர்ச்சை கிளம்பியது.

சேது திட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசாமி மூலமாக இந்த விவகாரம் நீதி மன்றம் சென்றது. தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா சேது சமுத்திர திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் நிலையில் இந்த திட்டம் ‘வருமா? வராதா? என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும் தி.மு.க தலைவர் கருணாநிதி சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி இத்திட்டத்தின் அவசியம் குறித்தும் அதை நிறைவேற்ற வேண்டும் என்று பேசத் துவங்கியுள்ளார்.

இந்த திட்டத்திற்காக, ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்கு வைகோ மேற்கொண்டது போல் கட்சிப்பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பையும் ஒன்றிணைக்கிற யுக்தியை இவரும் மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்த ஆலோசனை கூட்டத்தை நேற்று கூட்டினார். அதில் வியாபாரிக்ள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க, விடுதலை சிறுத்தைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

##~~##
வரும் 15&ம் தேதி காலையில் ஆர்ப்பாட்டமும் மாலையில் விளக்கப் பொதுக்கூட்டமும் நடத்துவதென்றும், அடுத்த மாதம் 11&ம் தேதி தூத்துக்குடி முழுவதிலும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதென்றும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
எப்படியாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.
எஸ்.சரவணப்பெருமாள்

படம்:
ஏ.சிதம்பரம்