Published:Updated:

`படைக்குத் தலைமைதான் முக்கியம்!' - ராமதாஸ் சொன்ன சிங்கம், செம்மறியாடு உதாரணம்

மத்தியிலும் ஆளும் பா.ஜ.கவின் 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடையவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது. பொது எதிரியான பா.ஜ.கவை வீழ்த்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு காங்கிரஸ் மேலிடம் மாநிலக் கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறது. பா.ஜ.க தலைமையும் தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் பா.ஜ.கவினரை சற்றுச் சிந்திக்க வைத்துள்ளது. மோடியும் மாநிலத்தில் உள்ள நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிவருகிறார். வாஜ்பாய் பாணியைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன' என ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வருகிறார். 

`படைக்குத் தலைமைதான் முக்கியம்!' - ராமதாஸ் சொன்ன சிங்கம், செம்மறியாடு உதாரணம்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்தான் பா.ஜ.கவுக்கு எதிரான பொதுக்கூட்டத்தை மம்தா பானர்ஜி நடத்தியுள்ளார். இதில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கௌடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய வாத கங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஃபருக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். 

`படைக்குத் தலைமைதான் முக்கியம்!' - ராமதாஸ் சொன்ன சிங்கம், செம்மறியாடு உதாரணம்

இந்நிலையில்தான் பா.ம.க தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ``படைக்குத் தலைமைதான் முக்கியம். ஒரு செம்மறியாட்டின் தலைமையில் வரும் சிங்கப்படையைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்; மாறாக, ஒரு சிங்கத்தின் தலைமையில் பீடுநடை போட்டு வரும் செம்மறியாட்டுப் படையைக் கண்டுதான் அஞ்சுவேன்!” மாவீரன் அலெக்சாண்டரின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டியுள்ள ராமதாஸ் `மக்களவைத் தேர்தலுக்கான பா.ம.கவின் கூட்டணி குறித்து ஊடகங்கள் கற்பனைக் குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். கூட்டணியைத் தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.