Published:Updated:

`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்!’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு

`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்!’ -  நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு
News
`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்!’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு

`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்!’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு

நெல்லையில் புரட்சியாளர் லெனின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி லெனின் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றார்.

`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்!’ -  நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திரிபுரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்த ரஷ்யப் புரட்சி நாயகரான லெனின் சிலைகள் புல்டோசரால் இடித்து அகற்றப்பட்டன. சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக லெனின் சிலை அமைக்கும் முயற்சி நடைபெற்றது. அரசு நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான ஓவியர் சந்ரு இந்தச் சிலையை வடிவமைத்தார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிலை வடிவமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி சிலையைத் திறந்து வைத்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகளான உ.வாசுகி, கே.கனகராஜ், கருமலையான், எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன், நாறும்பூநாதன், கிருஷி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்!’ -  நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு

இந்த விழாவில் பேசிய சீதாராம் யெச்சூரி, ``திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டபோது, ‘நீங்கள் சிலைகளை உடைக்கலாம். ஆனால், லெனின் சிந்தனைகளையோ சித்தாந்தங்களையோ உடைக்க முடியாது’ எனத் தெரிவித்தோம். அதன்படி இங்கே லெனின் சிலை மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. லெனின் நடத்திய புரட்சியைப் பாராட்டிய மகாகவி பாரதியார் பிறந்த இந்த மண்ணில் லெனின் சிலை திறக்கப்பட்டிருப்பது பொறுத்தமான நிகழ்வு. 

புரட்சி இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியம் இல்லை என்கிற கூற்றுப்படி நாட்டின் தற்போதைய நிலையில் இந்தியாவைக் காக்க பெரும் புரட்சி நடத்த வேண்டியதிருக்கிறது. தற்போது நாடு முழுவதும் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மோடி அரசில் பெரும் சந்தை வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. நாட்டின் 50 சதவிகித மக்களின் பொருளாதார நிலைக்கு இணையாக 19 பெரும் பணக்காரர்களிடம் பணம் குவிந்து கிடக்கிறது. 

`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்!’ -  நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு

2018-ம் வருடத்தின் புள்ளிவிவரப்படி, நாட்டில் உள்ள ஒரு பெரும் பணக்காரரின் ஒருநாள் வருமானம் மட்டும் 2,200 கோடியாக உள்ளது. 365 நாளின் அவரது வருமானத்தைக் கணக்கிட்டால் அது இந்த நாட்டின் பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை விடவும் அதிகம். அந்த அளவுக்கு பிரதமர் மோடி, பெரும் பணக்காரர்களுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் தொழிலதிபர்களுக்கும் நெருக்கமாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

பிரதமர் மோடியின் துணையுடன் நாட்டின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. பெரும் முதலாளிகள் இந்த நாட்டின் பணத்தைச் சுரண்டிக்கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல உதவி செய்யப்படுகிறது. ரஃபேல் ஊழல் போன்ற பெரிய ஊழல்கள் நடக்கின்றன. அதனால் மோடி தலைமையிலான மத்திய அரசு அகற்றப்பட வேண்டும். ஏற்கெனவே கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை.  இந்த நிலையில், விரைவில் மத்தியில் தேர்தல் வர இருக்கும் சூழலில் புதிய வாக்குறுதிகளுடன் மக்களை ஏமாற்ற வருவார்கள். 

அதனால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை அகற்ற வேண்டும் என்பதற்காக பொதுமக்களே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேர்க்கும் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே, மத்தியில் ஆளும் மோடி அரசை மட்டும் அல்லாமல் தமிழகத்தில் அவர்களுக்கு துணை நிற்கும் அரசாங்கத்தையும் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அடித்தளமாக லெனின் சித்தாந்தம் இருக்கும்’’ எனப் பேசினார்.