Published:Updated:

``தம்பிதுரையின் டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்!’’ - கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு

``தம்பிதுரையின் டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்!’’ - கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு
``தம்பிதுரையின் டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்!’’ - கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு

``முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படுத்துவதற்காகத்தான் தம்பிதுரை, டி.டி.வி தினகரனுடன் சேர்ந்து கொண்டு பேசி வருகிறார்'' என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

``தம்பிதுரையின் டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்!’’ - கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தேசத்தையும், நாட்டு பிரதமர் மற்றும் இந்து மதச் சின்னங்களையும் கொச்சைப்படுத்தி கண்காட்சி நடந்தது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தேசத்துக்கு எதிரான செயல்களுக்கு இடம் கொடுத்தற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களில் பெண் வன்கொடுமை என்று சொல்லி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அகநானூறு, புறநானூறு, மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட எல்லா இந்து இலக்கியங்களைக் கேவலப்படுத்தி கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது லாயோலா கல்லூரியின் தொடர்ச்சியாகப் பார்க்கிறோம். கிறிஸ்துவ கல்லூரி என்ற பெயரில் தேசவிரோதம் மற்றும் நக்சலை ஊக்குவிப்பது என்பது ஏற்புடையது அல்ல. அவர்கள் மன்னிப்பு கேட்டதாக சொன்னது பொய். ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது  அதிர்ச்சியாக உள்ளது” என்றவர் அரசியல் குறித்துப் பேசத் துவங்கினார்.

``தம்பிதுரையின் டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்!’’ - கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு

``தம்பிதுரைக்கு டார்க்கெட் பி.ஜே.பி. கிடையாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என தம்பிதுரை முயற்சி எடுத்தார். அதில் அவருக்கு என்ன பேரம், எவ்வளவு கோடி என்று எனக்குத் தெரியாது. ஜெயிலுக்குள் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் சிறப்புச் சலுகைள் வாங்கிக் கொண்டு இருப்பவர் சசிகலா. கணிசமான எம்.எல்.ஏ-க்களுடன் வந்தால் நாங்கள் தம்பிதுரையைச் சேர்த்து கொள்வதாக தங்க தமிழ்செல்வன் கூறியதில் இருந்து பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பது நிரூபணமாகி விட்டது.

தினகரனுடன் டீல் போட்டு அ.தி.மு.க தலைமையை சங்கடப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தம்பிதுரை பேசி வருகிறார். அவர் ஸ்கோர் செட்டில் பண்ணுவது பி.ஜே.பி.,யிடம் அல்ல. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தர்ம சங்கடத்தை உருவாக்குவதற்கான சதி. சாதிக்பாட்ஷா கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோவை திசை திருப்பத்தான் கொடநாடு பிரச்னை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வரவில்லை என்றுதான் சொல்லியுள்ளார், பி.ஜே.பி.,க்கு எதிராக எதுவும் பேசவில்லை” என்றார்