Published:Updated:

``மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா” -பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிக்கு அஸ்திவாரமா?

``மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா” -பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிக்கு அஸ்திவாரமா?
``மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா” -பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிக்கு அஸ்திவாரமா?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முடிவாகிவிட்டது போல, எய்ம்ஸ்  அடிக்கல் நாட்டுவதற்கு  மதுரை வரும் பிரதமர் மோடிக்காக, இரண்டு கட்சியினரும் இணைந்து வேலை செய்து வருகிறார்கள்.

``மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா” -பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிக்கு அஸ்திவாரமா?

வரும் 27 -ம் தேதி மதுரை விமான நிலையம் அருகே  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், மதுரையிலிருந்து தேஜஸ் ரயில் சேவை, ராமேஸ்வரத்துக்கு நான்கு வழிச்சாலை உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதை முடித்துவிட்டு அருகிலுள்ள மண்டேலா நகர் மைதானத்தில் பா.ஜ.க-வின் மண்டல மாநாட்டிலும் பேசுகிறார். இது நாடாளுமன்றத் தேர்தல் பிராசாரத்தின் தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது. மற்ற ஏற்பாடுகளை அரசுத் தரப்பில் செய்து வருகின்றனர். 

கட்சிக் கூட்டம் நடைபெறும் இடத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தலைமையில் கடந்த 20-ம் தேதி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. கட்சிக் கூட்டத்துக்கு லட்சக்கணக்கில் மக்களை திரட்டி வர வேண்டுமென்று பா.ஜ.க-வினர் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், எய்ம்ஸ் விழாவில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வதால் மாவட்ட நிர்வாகம் செய்து வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் அ.தி.மு.க நிர்வாகிகளும், பா.ஜ.க நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்கள். இப்பவே அ.தி.மு.க - பா.ஜ.க கட்சியினர் இணைந்து வேலை செய்வதை பார்த்து கூட்டணி உறுதியாகிவிட்டது என்கிறார்கள் சிலர்.