Published:Updated:

‘அஜித்துக்கு நூல் விட்டார்கள் அவர் அறுத்தெறிந்துவிட்டார்’– பா.ஜ.கவை விளாசிய வேல்முருகன்

‘அஜித்துக்கு நூல் விட்டார்கள் அவர் அறுத்தெறிந்துவிட்டார்’–  பா.ஜ.கவை விளாசிய வேல்முருகன்
‘அஜித்துக்கு நூல் விட்டார்கள் அவர் அறுத்தெறிந்துவிட்டார்’– பா.ஜ.கவை விளாசிய வேல்முருகன்

``தமிழக பா.ஜ.க., நடிகர் அஜித்துக்கு நூல் விட்டுப்பார்த்தது, அஜித் அதை அறுத்துள்ளார்.” என,  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் இந்து மதத்தின் பெயரால், இந்தியாவின் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரியாக இருக்கின்ற சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவிய விழாவை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. இந்திய நாட்டை ஆளுகின்ற அரசியல் கட்சியான பா.ஜ.க.-வின் தமிழக  தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அக்கல்லூரி  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஒற்றுமையாக வாழும் சமூகத்தில்  சமீபகாலமாக மதத்தின் பெயரால் நமக்குள் ஒரு பிரிவினையை மத மோதலை  உருவாக்கி மதக்கலவரத்தை உருவாக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது இதை இந்த மண் ஏற்றுக்கொள்ளாது. தமிழக  பா.ஜ.க-வினர் நடிகர்களை வைத்து அரசியல் செய்ய முயல்கிறார்கள்.  ரஜினியை வைத்து அரசியல்  செய்யப் பார்த்தார். கால் நுாற்றாண்டுகளாக அவரும் அரசியலுக்கு வர முயற்சி செய்துகொண்டே இருக்கிறார். பின் கமலை வைத்து முயற்சி செய்தார்கள், அவரும் மதில்மேல் பூனையாக இருக்கிறார்.  விஜய்யை வருமானவரிதுறையை வைத்து மிரட்டினார்கள். இப்போது அஜீத்துக்கு நுால் விட்டுப் பார்த்தார்கள். அதை அஜித் அறுத்தெறிந்துள்ளார்.” என்றார்.