அலசல்
Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

இரா.முருகவேள் கோவை
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 50,000, 70,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று அதிதீவிரமாக வாதிடுகிறார்கள்.

இவ்வளவு சம்பளம் அவசியமானது. வரவேற்கத்தக்கது. இது இல்லாமல்தானே நம்மவர்கள் பாலைவனத்திலும், கடுங்குளிர் பிரதேசங்களிலும் உழைத்துக் களைக்கிறார்கள். எல்லோருக்கும் இந்தச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே சரியானது. தவிர, சம்பளத்தை உயர்த்திக் கொடு என்று அவர்கள் கேட்கவே இல்லை.

ஆனால் அரசு நமது வரியையும், செல்வங்களையும் உண்மையிலேயே யாருக்கு வாரி வழங்கி அழிக்கிறது தெரியுமா?

1. நீலகிரி கூடலூரில் 80,000 ஏக்கர் பசுமைமாறாக் காடுகள் 10 டீ எஸ்டேட்டுகளுக்கு 99 வருடக் குத்தகைக்கு விடப்பட்டன. அற்ப குத்தகை. சில ஆயிரம் கூட இல்லை. குத்தகை காலம் 1990-களிலேயே முடிந்துவிட்டது. இன்றுவரை இந்நிறுவனங்கள் வெளியேறவில்லை. இதனால், கார்ப்பரேட்கள் ஈட்டிய லாபம் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் இருக்கும். நீலகிரியின் காட்டுவளத்தில் 20 சதவிகிதம் அழிந்துவிட்டது. 4,000 ஓடைகள் வற்றிப்போய்விட்டன.

2. இந்திய அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. நாம் இதனால் அடைந்தது என்ன என்று ஒருநாளாவது கேட்டுள்ளீர்களா?

3. தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் பாலிசியின்படி ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனத்துக்கு 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் இல்லை. கழிவுநீர் சுத்திகரிப்புக்கு முதலீட்டில் 25 சதம் மானியமாக வழங்கப்படும். நோக்கியா கதை தெரியும்தானே/ மானியத்தைப் பெற்றுக்கொண்டு லாபத்தைச் சுருட்டிக்கொண்டு வரி கட்டாமல் ஓடிய கதை.

4. 10 ஆண்டுகளுக்கு வரி Soft loan ஆகக் கருதப்படும்.

5. கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலம் வாங்குமானால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 சதவிகிதம் கட்டினால் போதும்.

கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளில் இது ஒரு துளி மட்டுமே. வாத்தியார் மடியில் கைவைத்தால் இதெல்லாம் சரியாகிவிடுமா?

பொம்மையா முருகன்

எய்ம்ஸ்-க்கு நேத்து அன்புமணி அடிக்கல் நட்டுருக்காரு... இன்னைக்கு மோடி நட்டுட்டு போயிருக்காரு... நாளைக்கு ராகுல் வந்து நடுவாரு... இப்படியே காலம் கடந்து போகும்... ஆனா ஒன்னுமட்டும் தெரிஞ்சிக்க, மதுரைக்காரய்ங்க நமக்கு எப்போதுமே ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி மட்டும்தான் துணை!

ஆஹான்

thirumarant
மோடி, பா.ஜ.க-ன்னு வந்தா... மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி குதுகாலத்துடன் ஒண்ணுகூடிடறாங்க...

ஆஹான்

skpkaruna
இந்த ஆட்சியில் பிரதமர் மோடி பெருமையுடன் திறந்துவைத்த காஷ்மீர் டனல் சாலை... பற்பல எட்டுவழி, ஆறுவழிச் சாலைகள்... மும்பை கடல் பாலம், பிரம்மபுத்திரா இரட்டைப்பாலம் என அத்தனைத் திட்டங்களும் காங்கிரஸ் அரசில் மன்மோகன்சிங் அடிக்கல் இட்டுத் தொடங்கியவை. எனில், இந்தச் சாதனைகள் யாருக்குச் சொந்தம்?

reportersridhar
அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தப் போதிய பணம் இல்லை எனக்கூறும் அமைச்சர்கள் தங்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட ஊதியத்தைத் தமிழக அரசின் நிதி நிலை கருதித் திரும்பப்பெறத் தயாரா?