Published:Updated:

வீரபாண்டி ஆறுமுகம் பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்

வீரபாண்டி ஆறுமுகம் பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்
வீரபாண்டி ஆறுமுகம் பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவின் மகள் டாக்டர் மலர்விழி-டாக்டர் செந்தில் ஆனந்த் திருமணம் சென்னையிலுள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்தார்.

வீரபாண்டி ஆறுமுகம் பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்

அப்போது அவர், மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

நான் பல ஆண்டுகள் சேலத்தில் கலை உலக வாழ்க்கை வாழ்ந்தவன். அன்று இருந்த சேலத்தையும், இன்றைய சேலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வீரபாண்டி ஆறுமுகம் பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்

சேலத்தில் உள்ள இரும்பாலை, புதிய, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு நகரமே மாறி இருக்கிறது என்றால் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் தான். எல்லோரும் எப்போதும் அவரை சேலத்தின் சிங்கம் என்று வர்ணித்தார்கள். ஆனால் பழைய காலத்து சேலத்தையும், இன்றைய சேலத்தையும் பார்த்தால் அதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் அதற்கு வீரபாண்டி ஆறுமுகம்தான் காரணம் என்று சொல்லலாம்.

##~~##

எனவே அவரை ‘சேலத்து சிற்பி’ என்பது பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன். அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, குடும்பத்தில் சில விஷமத்தனங்களை ஏற்படுத்தலாம். தம்பி ராஜா போன்றவர்கள் அதற்கெல்லாம் பலியாகி விடாமல் அவரது தந்தை எந்த அளவு பற்றும், பாசத்துடனும் பணியாற்றினாரோ அதேபோல் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், சுப.தங்கவேலன், சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், செல்வகணபதி, கே.பி.ராமலிங்கம், காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக அனைவரையும் வீரபாண்டி ராஜா வரவேற்றார்.

படங்கள்: பாலசுப்பிரமணியன்