Published:Updated:

‘தேர்தல் நேரத்தில் இந்த விருது சரியானதல்ல’ - பத்மஸ்ரீ விருதை நிராகரித்த எழுத்தாளர்

‘தேர்தல் நேரத்தில் இந்த விருது சரியானதல்ல’ - பத்மஸ்ரீ விருதை நிராகரித்த எழுத்தாளர்
‘தேர்தல் நேரத்தில் இந்த விருது சரியானதல்ல’ - பத்மஸ்ரீ விருதை நிராகரித்த எழுத்தாளர்

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.  

‘தேர்தல் நேரத்தில் இந்த விருது சரியானதல்ல’ - பத்மஸ்ரீ விருதை நிராகரித்த எழுத்தாளர்

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 94 பேர் பத்மஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளரும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தாவுக்கும் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துள்ளார்.

‘தேர்தல் நேரத்தில் இந்த விருது சரியானதல்ல’ - பத்மஸ்ரீ விருதை நிராகரித்த எழுத்தாளர்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்மஸ்ரீ விருதுக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமையாகவுள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள இந்த நேரத்தில் இந்த விருதை நான் பெறுவது சரியாக இருக்காது. இந்த விருதை பெறுவதால் அரசுக்கும் எனக்கும் இக்கட்டான சூழல் உருவாகும். அதன் காரணமாகவே இந்த விருதை நான் மறுத்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

கீதா மேத்தாவின் சகோதரர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வுடனான கூட்டணியிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.