Published:Updated:

பெங்களூர் காதல் ஜோடி கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி சாவு

பெங்களூர் காதல் ஜோடி கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி சாவு
பெங்களூர் காதல் ஜோடி கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி சாவு

கிருஷ்ணகிரி: பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்த இடத்தில் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகா மாநிலம், சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமேஷ் பேகம் மற்றும் இவரது தங்கை ரஷ்யா பேகம். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரிடமிருந்து விவாகரத்து ஆனவர்கள். அதன்பிறகு உமேஷ் பேகம் அதே பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவரையும், ரஷ்யா பேகம், ரோஷன் என்பவரையும் காதலித்து வந்தனர்.

இவர்கள் நான்கு பேரும் நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையை சுற்றிப்

##~~##
பார்க்க வந்தனர். அணையிலுள்ள பூங்கா, மான் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்தப் பின் அணையின் உட்புறம் சென்று குளிக்க முயற்சி செய்துள்ளனர். வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக அணையின் ஒரு இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் இறங்கி இவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக ரஷ்யா பேகம் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். கரைக்கு வரமுடியாமல் தத்தளித்த அவரை காப்பாற்ற சலீம் முயற்சி செய்துள்ளார். இருப்பினும் இருவரும் கரையேற முடியாமல் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அதன் பிறகு உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் இவர்கள் சடலம் மீட்கப்பட்டது. விரைவில் திருமணமாக இருந்த நிலையில் காதல் ஜோடிகளுக்கு சுற்றுலா வந்த இடத்தில் நடந்த விபரீதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

-எஸ்.ராஜாசெல்லம்