Published:Updated:

`கறுப்புக் கொடி காட்டாதீங்க’ - பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

`கறுப்புக் கொடி காட்டாதீங்க’ - பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை!
`கறுப்புக் கொடி காட்டாதீங்க’ - பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

மதுரை, தோப்பூரில் ரூபாய் 1,264 கோடி மதிப்பில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இன்று பிற்பகல் 11:30 மணியளவில் பிரதமர் மோடி மதுரை வரவுள்ளார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பல தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த விழாவை முடித்துக்கொண்டு மதுரை ரிங் ரோட்டில் நடக்கும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 

`கறுப்புக் கொடி காட்டாதீங்க’ - பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என நான்கு வருடத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் அடிக்கல் நாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டவுள்ளதாக பல்வேறு கட்சியினரும், பா.ஜ.க எதிர்ப்பு அமைப்புகளும் அறிவித்துள்ளனர். 

`கறுப்புக் கொடி காட்டாதீங்க’ - பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

நேற்று, மதுரையில் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட விழா ஏற்பாடுகளை பர்வையிட்ட பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் பேசும் போது, “ உலகத்திலேயே தலை சிறந்த மருத்துவமனை மதுரை மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உதவும் வகையில் அமையவுள்ளது. அதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இங்கு வரவுள்ளார். மேலும் இரண்டு பல்நோக்கு மருத்துவமனைகளைத் திறந்துவைக்கவுள்ளார். இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவமனையைத் தமிழகத்துக்கு கொண்டு வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்குக் கருப்பு கொடி காட்டுபவர்கள் தமிழர் நலனுக்கு எதிரானவர்கள். இது என்னுடைய வேண்டுதல் தயவு செய்து இந்த கருப்புக் கொடி போராட்டத்தைக் கைவிட வேண்டும். பிரதமரின் வருகை உங்களுடைய நலனுக்காக மட்டுமே என்பதை அனைவரும் உணர வேண்டும்’ எனக் கூறிவிட்டு ‘எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை எய்ம்ஸ் நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளை மாற்றிச் சொல்லி முடித்தார்.