Published:Updated:

`சிறை செல்ல 1000 பேர் தயார்' - அற்புதம்மாளுக்கு நம்பிக்கை அளித்த மக்கள்!

`சிறை செல்ல 1000 பேர் தயார்' - அற்புதம்மாளுக்கு நம்பிக்கை அளித்த மக்கள்!
`சிறை செல்ல 1000 பேர் தயார்' - அற்புதம்மாளுக்கு நம்பிக்கை அளித்த மக்கள்!

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை ஆளுநர் கையொப்பம் ஒன்றினால் 5 மாத காலமால தாமதமாகி வருகிறது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைத் தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் எனக் கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் எழுவர் விடுதலைத் தொடர்பாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது பல நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 7 பேரையும் விடுவிக்க வேண்டும் எனப் பலரும் குரல்கொடுத்துவரும் நிலையில், பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார்.

கோவையில் கடந்த வியாழனன்று தொடங்கிய மக்கள் சந்திப்பு நிகழ்வு தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாக அற்புதம்மாள் தெரிவித்தார். நிகழ்வில் 7 பேர் சிறையிலிருந்து வெளிவரும் வரை தாங்கள் சிறையில் அடைபடத் தயார் எனக் கூறியதில் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள். தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் தொடர்பு கொண்டு தன்னையும் அதில் இணைத்துக்கொள்ளத் தயார் என அற்புதம்மாளிடம் கூறி வருகின்றனர். இதனிடையே கோவையில் சிறை செல்ல தயார் என  அறிவித்தவர்களின் பெயர்களை நேற்று ஈரோடு செய்தியாளர் சந்திப்பில் வாசித்தார். இந்த எண்ணிக்கை 1000 ஐ தாண்டும் என்றாலும் அதற்கான தேவையை ஆளுநர் உருவாக்க மாட்டார் என நம்பிக்கையோடு தெரிவித்து பெயர் பட்டியலை நன்றியோடு தெரிவித்தார்.