Published:Updated:

‘ஊராட்சி சபைக் கூட்டம்!’ - மு.க.ஸ்டாலின் நாளை குடியாத்தம் வருகை 

‘ஊராட்சி சபைக் கூட்டம்!’ - மு.க.ஸ்டாலின் நாளை குடியாத்தம் வருகை 
‘ஊராட்சி சபைக் கூட்டம்!’ - மு.க.ஸ்டாலின் நாளை குடியாத்தம் வருகை 

குடியாத்தத்தில், நாளை நடைபெறும் தி.மு.க-வின் ஊராட்சி சபைக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ‘‘மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்... மக்களின் மனங்களை வெல்வோம்’’ என்ற முழக்கங்களுடன் தி.மு.க-வில் ‘ஊராட்சி சபைக் கூட்டம்’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 9-ம் தேதி திருவாரூரில் தனது பயணத்தை தொடங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார். வேலூர் மாவட்டத்திலும் மத்தியப் பகுதி, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் வடக்கு ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் நாளை (28-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் தி.மு.க-வின் ஊராட்சி சபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சபையில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டபிறகு, குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஸ்டாலின் வருகையையொட்டி, தி.மு.க-வினர் முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.