Published:Updated:

நிதின் கட்கரி முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை இஷா கோபிகர்!

நிதின் கட்கரி முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை இஷா கோபிகர்!
நிதின் கட்கரி முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை இஷா கோபிகர்!

நடிகை இஷா கோபிகர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். 

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான `கம்பெனி’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர். பாலிவுட்டைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் அவர் நடித்து வந்தார். தமிழில் விஜய்யுடன் `நெஞ்சினிலே', விஜயகாந்த்துடன் `நரசிம்மா’ ஆகிய படங்களில் இஷா கோபிகர் நடித்திருக்கிறார். நரசிம்மா படத்துக்குப் பிறகு, தமிழில் எந்தப் படத்திலும் நடிக்காத அவர், `இன்று நேற்று நாளை’ புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.


நடிகை இஷா கோபிகர் அரசியலில் இணையப்போவதாக சமீபகாலமாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க-வின் பெண்கள் போக்குவரத்துப் பிரிவின் செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஷா, ``எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்குச் சேவையாற்றத் தயராக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.