Published:Updated:

`இதுதான் அண்ணா, பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடமா?’ - வைகோவுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

`இதுதான் அண்ணா, பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடமா?’ - வைகோவுக்கு தமிழிசை சரமாரி கேள்வி
`இதுதான் அண்ணா, பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடமா?’ - வைகோவுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட நேற்று மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக ம.தி.மு.க சார்பில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

`இதுதான் அண்ணா, பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடமா?’ - வைகோவுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

அவரின் அறிக்கையில், “தென் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரும் மருத்துவத் தேவைகளை வழங்க வசதியாக மதுரையில் எய்ம்ஸ், தஞ்சை மற்றும் நெல்லையில் உயர்தர பல்நோக்கு மருத்துவனை மற்றும் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மதுரையில் வைகோ தலைமையில் ம.தி.மு.க-வினர் நடத்திய போராட்டம் ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் என்ற எல்லையைத் தாண்டி நாட்டின் பிரதமரைத் தரக்குறைவாகப் பேசி அங்கே கடமையாற்ற வந்த காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் எச்சரித்துள்ள நடவடிக்கைதான் நீங்கள் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா? 

`இதுதான் அண்ணா, பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடமா?’ - வைகோவுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

பிரதமர் வருகையைக் கண்டிக்கும் நீங்கள் தென் தமிழகத்திலிருந்து பல முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழகத்துக்குக் கொண்டு வந்த நலத் திட்டங்கள் என்ன என்பதைக் கூற முடியுமா? உங்களை அகில இந்திய அளவில் அடையாளம் கொட்டிக்கொள்ள மட்டுமே உங்களின் பதவியைப் பயன்படுத்திக்கொண்டீர்களே தவிர, வேறு என்ன திட்டங்களை உங்கள் பகுதிக்குக் கொண்டுவந்தீர்கள்? இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்வதாக அடையாளப்படுத்திக்கொண்ட நீங்கள் இன்று அதே தமிழர்களைக் கொன்று குவிக்க துணைபோன தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளீர்கள். அடிக்கடி நிறம் மாறும் உங்கள் அரசியலை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

`இதுதான் அண்ணா, பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடமா?’ - வைகோவுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

கஜா புயலின்போது பிரதமர் ஒப்புக்குக்கூட தமிழக மக்களை பார்க்க வரவில்லை என்று கூறும் வைகோ, ஒப்புக்கு அரசியல் நடத்துபவர் அல்ல மோடி. கஜா புயல் வருவதற்கு முன்னதாக மத்திய அரசு புயல் எச்சரிக்கையையும் உதவிகளையும் தமிழகத்துக்கு வழங்கியதால் தான் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோதும் மோடி தமிழக மக்களின் துயரங்களை பகிர்ந்துகொண்டார். மக்கள் நலத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரதமரைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதைத் தமிழக பா.ஜ.க-வும் பொறுத்துக்கொள்ளாது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

`இதுதான் அண்ணா, பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடமா?’ - வைகோவுக்கு தமிழிசை சரமாரி கேள்வி