Published:Updated:

``ரஜினிதான் பா.ஜ.க-வின் டார்கெட் !" -காந்தி நினைவு நாள் கூட்டத்தில் கரு.பழனியப்பன் பேச்சு

``ரஜினிதான் பா.ஜ.க-வின் டார்கெட் !"  -காந்தி நினைவு நாள் கூட்டத்தில் கரு.பழனியப்பன் பேச்சு
``ரஜினிதான் பா.ஜ.க-வின் டார்கெட் !" -காந்தி நினைவு நாள் கூட்டத்தில் கரு.பழனியப்பன் பேச்சு

காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நேற்று கோவையில் காந்தி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் , "இப்போதைய இளைஞர்கள் பெரியாரை விழுந்து விழுந்து படிப்பதற்குக் காரணம் பா.ஜ.க             - தான்.  பா.ஜ.க-வினர் ஒருவரைத் திட்டினால், அவர்கள் நல்லவராக இருப்பார்கள் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள்.  அவர்களைத் தேடுகிறார்கள்.  தமிழ்நாட்டில் பெரியார்தான் நிரந்தர ஹீரோ. தன் குணம் மாறாமல் இருதவர் அவர். ஆகவே, இளைஞர்கள் அவரை ஹீரோவாக  நினைக்கிறார்கள்.

எதிர் கருத்துகளையும் பொறுமையாகக் கேட்டு, பதில் சொன்னவர் பெரியார்.  தன்னுடைய மேடைகளிலேயே தனக்கு எதிர் கருத்துடையவர்களைப் பேசச் செய்தவர். ஆனால், இந்துத்துவாவினர் அப்படி இல்லை. அவர்களால் எதிர் கருத்துக்களை ஏற்கவே  முடியாது. அதனால்தான், அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுகின்றனர். எதிர் கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் கொள்கை அவ்வளவு வீக். தங்களுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார் என்பதற்காகவே காந்தியை சுட்டுக் கொலைசெய்தார்கள்.

பா.ஜ.க-வினர், காந்தி கொல்லப்பட்ட வரலாற்றை மாற்றுவார்கள்;  தமிழனாக, மாராட்டியனாக, மலையாளியாக ஒவ்வொரு மாநிலத்தவரும் தனித்தன்மையுடன் இருந்தால்தான், அவன் ஒருங்கிணைந்து இந்தியனாக இருக்க முடியும்.  அப்படி இல்லாமல், யாரும் இந்தியனாக மட்டும் இருக்கவே முடியாது. ஆனால்,  பா.ஜ.க-வினர்
ஒரே நாடு… ஒரே மொழி என்கிறார்கள். உண்மையில், பா.ஜ.க-தான் ஆன்ட்டி இண்டியன். அவர்கள் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று பார்க்கிறார்கள். ரஜினிதான் அவர்கள் டார்கெட்.  ரங்கராஜ்  பாண்டே வந்தால்கூட  அவர்களுக்கு ஓகே தான். தமிழகத்தில் பா.ஜ.க வர முடியாது என்கிற எண்ணத்தில் நாம் சும்மா இருந்துவிடக் கூடாது'' என்றார்.