Published:Updated:

`அ.தி.மு.கவை சிதறச் செய்த விஷக்கிருமி தினகரன்!' - திவாகரன் சாடல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`அ.தி.மு.கவை சிதறச் செய்த விஷக்கிருமி தினகரன்!' - திவாகரன் சாடல்
`அ.தி.மு.கவை சிதறச் செய்த விஷக்கிருமி தினகரன்!' - திவாகரன் சாடல்

`அ.தி.மு.கவை சிதறச் செய்த விஷக்கிருமி தினகரன்!' - திவாகரன் சாடல்

`அ.தி.மு.கவை சிதறச் செய்த விஷக்கிருமி தினகரன்!' - திவாகரன் சாடல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் ஐம்பதாவது நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திவாகரன், திருவாரூரில் உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திருவாரூர் நகரக் கழக அண்ணா திராவிடக் கழக அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 

செய்தியாளர்களைச் சந்தித்த திவாகரன், ``அண்ணா தமிழ், தமிழர், தமிழ்நாடு இதற்காகப் பாடுபட்டு திராவிடத்தை அரியணை ஏற்றியவர். அந்த அரியணை பற்றி நாம் நினைவு கூற வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைப் பூ போல் எல்லோரையும் மதித்து அரசியல் செய்தவர் அண்ணா. இளைஞர்களுக்கு மிகத் தெளிவான வழியைக் காட்டியதும் அவர்தான். இந்தச் சமயத்தில் நான் கூறிக்கொள்வது என்னவென்றால் இளைஞர்களும் மாணவர்களும் அண்ணாவின் பழைய புகைப்படம், புகழ், அவர் செய்த நன்மைகள் பற்றியெல்லாம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என அனைத்திலும் அவருடைய கோட்பாடுகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அது பாராட்டக்கூடிய ஒன்று. இளைஞர்களுக்கு அண்ணாவின் கோட்பாடுகள் நன்றாகத் தெரிகிறது. இது பெரிய மாற்றமாகவே நான் கருதுகிறேன்’’ என்றார். 

`அ.தி.மு.கவை சிதறச் செய்த விஷக்கிருமி தினகரன்!' - திவாகரன் சாடல்

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திவாகரன், ``பட்ஜெட்டில் நிறைய நல்ல விஷயங்கள் அறிவித்திருக்கிறார்கள். பொதுவாக இவ்வளவு திட்டங்கள் இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வருமான வரி உச்சவரம்பு ஐந்து லட்ச ரூபாய் என்பது விவசாயிகளுக்குப் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. வருடத்துக்கு 6,000 ரூபாய் என்பதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதாவது ஒரு நாளைக்கு 17 ரூபாய் வீதம் வருடத்துக்கு 6,000 ரூபாய் வழங்குவதாக கூறியதை கோடிட்டுக் காட்டியுள்ளார்’ என்றார்.

அ.தி.மு.க மற்றும் தினகரன்  குறித்து பேசிய திவாகரன், ``அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றுசேர்க்க வேண்டும் என்று அக்கட்சியில் உள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மூழ்கப்போகிற கப்பல். அதற்கு கேப்டன் சரியில்லை. தான்தோன்றித்தனமாக உள்ள கேப்டன் அரசியல் சரியில்லை என்று கூறி சர்வாதிகாரமாக இருக்கிறார். அவர், ஒரு கிச்சன் கேபினட் வைத்துக்கொண்டு தன்னை நம்பி வந்தவர்களை இம்சைபடுத்திக் கொண்டிருக்கிறார் அதைத்தாங்க முடியாமல்தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தங்க தமிழ்ச்செல்வன் வெளியேறப் போகிறார் என்ற செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை.

அ.தி.மு.க-வுக்கு 25 சதவிகித ஓட்டு வாங்கி உள்ளதென கருத்துக் கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு அதுபோன்ற ஒரு நிலை இல்லை. ஆனாலும், தினகரனுடைய கைத்தடிகள் ஒரு பொய்யான தகவலை வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் தங்களுக்கும் நல்ல ஒரு ஓட்டு வங்கி நிலவியதாகக் கூறி போட்டு வருகின்றனர். ஆனால், எனக்கு அதில் துளியளவுகூட நம்பிக்கை இல்லை.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் நாங்கள் தற்போதுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் எங்களுடைய செயற்குழுவைக் கூட்டி அப்போதே எங்களுடைய முடிவுகளை வெளியிடுவோம். தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது செய்யக்கூடிய நினைக்கக்கூடிய கட்சி எதுவாயினும் எங்கள் ஆதரவு அவர்களுக்கு இருக்கும். ஆனால், அ.தி.மு.கவைச் சிதறச் செய்த விஷக்கிருமி தினகரனை மட்டும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம்’’என்றார்.

`அ.தி.மு.கவை சிதறச் செய்த விஷக்கிருமி தினகரன்!' - திவாகரன் சாடல்

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ``காவிரி டெல்டா என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க வேண்டும். பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது தவறு. ஹைட்ரோகார்பன் எடுப்பது போன்ற திட்டங்களை திரும்பப் பெற வேண்டும். இது முற்றிலும் விவசாயத்தை நம்பியே இடம். இதைச் சீர்குலைக்க நினைத்தால், அதை டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் விரும்பமாட்டார்கள். இந்த போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்தாக வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம்  ஊக்குவிக்கப்படும் என்று கூறி கூறியிருப்பது வரவேற்க வேண்டியதுதான். ஆனால், விவசாயம் செய்யும் இடங்களுக்கு இத்திட்டம் வேண்டாம். விவசாயம் இல்லாத மற்ற மாநிலங்களில் இந்த மாதிரியான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றிக் கொள்ளட்டும். இங்கு விவசாயம்தான் முக்கியம். நாங்கள் விவசாயம் செய்யும் மண்ணில் விவசாயத்தை அழிக்கும் எந்தத் திட்டமும் தேவை இல்லை என்பதே எனது கருத்து’’ எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு