Published:Updated:

`என்னுடைய ஒரே தகுதி இதுதான்!' - விருப்ப மனு வாங்கிய அ.தி.மு.க நடிகர் 

`என்னுடைய ஒரே தகுதி இதுதான்!' - விருப்ப மனு வாங்கிய அ.தி.மு.க நடிகர் 
`என்னுடைய ஒரே தகுதி இதுதான்!' - விருப்ப மனு வாங்கிய அ.தி.மு.க நடிகர் 

அ.தி.மு.க சார்பில் எம்.பி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வாங்கிய நடிகர் ஜெ.எம். பஷீர் என்கிற விஜய்கார்த்திக், தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அதில், சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது முதல் முறையாக தன்னை கட்சியிலிருந்து நீக்கியதைக் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் அறிவிப்பு வெளியானதும், முதல் முறையாக வேட்பாளரை அறிவிக்கும் கட்சியாக அ.தி.மு.க இருந்தது. அதன்பிறகு வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றம் செய்வதும் வழக்கம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட திருவாரூர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால், திருவாரூர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்துவிட்டது. 

இந்தச் சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. கூட்டணிகுறித்த பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை யாருடன் கூட்டணி என்பது இறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா பாணியில் இன்று முதல் எம்.பி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்தது. இதனால், இன்று காலை முதல் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற நிர்வாகிகள் காத்திருந்தனர். 

109-வது கட்டண ரசீது எண்ணைக் கொண்ட விருப்ப மனுவை, தென்சென்னை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில், மாவட்ட முன்னாள் இணைச் செயலாளரும் நடிகருமான ஜெ.எம். பஷீர் என்கிற விஜய்கார்த்திக், கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கொடுத்தார். அவரின் விருப்ப மனுவில், தன்னுடைய சுய விவரங்கள் இடம் பிடித்துள்ளன. அதில், இந்தத் தொகுதியில் நீங்கள் போட்டியிட விரும்புவதற்கான முக்கியக் காரணம் என்ற கேள்விக்கு, நான் செய்த சமூகப் பணி என்று கூறியுள்ளார். 22-வது கேள்வியான கழகத்திலிருந்து எப்போதாவது நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை உங்கள்மீது எடுக்கப்பட்டுள்ளதா என்பதற்கு, ஆம் என்று பதிலளித்த ஜெ.எம்.பஷீர், 'பொதுச் செயலாளராக சசிகலா இருந்த சமயத்தில், எந்தவித விசாரணையும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 25-வது கேள்வியில், தாங்கள் கூற விரும்புகின்ற மற்ற விவரங்கள் என்பதற்கு, சசிகலாவால் முதல் முறையாக நீக்கப்பட்டபவன் நான் என்று குறிப்பிட்டுள்ளார். 

கையெழுத்திட்டார். சசிகலா, முதல் முறையாக என்னைத்தான் நீக்கினார். அந்த ஒன்று போதும்  அதன்பிறகுதான் மற்ற மூத்த நிர்வாகிகளை நீக்க நடவடிக்கை எடுத்தார். 1995-ம் ஆண்டு முதல், கட்சியில் உறுப்பினராக இருந்துவருகிறேன். கட்சிக்காக சிறைக்கும் சென்றுள்ளேன். நடிகர் என்பதால், எனக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது. அதனால் வெற்றி பெறுவேன். மேலும், என்னுடைய வெற்றிக்கு கட்சி சின்னமும் ஜெயலலிதா மற்றும் தற்போது நடந்துவரும் நல்லாட்சி, அரசின் திட்டங்களும் உறுதுணையாக இருக்கும்" என்றார். 

அ.தி.மு.க-வினர் கூறுகையில், ``முதல்நபராக முக்கூர் சுப்பிரமணியம் வந்தவாசி தொகுதிக்கும், தமிழ்மகன் உசேன், ராமநாதபுரம், வேலூருக்கும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மத்திய சென்னைக்கும், முன்னாள் அமைச்சர் ரமணா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும் விருப்ப மனு தாக்கல்செய்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் எம்.பி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர்களுடைய ஆதரவாளர்கள் இன்று விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மத்திய சென்னைக்கு விருப்ப மனுதாக்கல் செய்தார். இரண்டவதாக, தமிழ்மகன் உசேன் விருப்ப மனு தாக்கல்செய்துள்ளார்" என்றனர்.