Published:Updated:

``யானையைச் சுண்டெலி தடுக்க முடியாது" - கறுப்புக்கொடிக்கு எதிராக விளாசும் தமிழிசை!

எம்.புண்ணியமூர்த்தி
``யானையைச் சுண்டெலி தடுக்க முடியாது" - கறுப்புக்கொடிக்கு எதிராக விளாசும் தமிழிசை!
``யானையைச் சுண்டெலி தடுக்க முடியாது" - கறுப்புக்கொடிக்கு எதிராக விளாசும் தமிழிசை!

``2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கதான் வெற்றி பெறும். தமிழகத்தில் பிரதமருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுகிற சின்ன கூட்டத்தைப் பற்றி பா.ஜ.க கவலைப்படவில்லை. யானையை சுண்டெலி எப்படித் தடுக்க  முடியும்?" என்று கோவையில் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், ``தமிழகத்தில் பா.ஜ.க வலுப்பெற்று வருகிறது. தேர்தலில் நல்ல கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். பா.ஜ.க பூத் ஏஜெண்டுகளை உற்சாகப்படுத்துவதற்காக 12-ம் தேதி, யோகி ஆதித்யநாத் திருநெல்வேலிக்கும், 14-ம் தேதி அமித் ஷா ஈரோட்டுக்கும், 15-ம் தேதி நிதின் கட்கரி சென்னைக்கும் வர உள்ளார்கள். தேசிய கட்சியான பா.ஜ.க தமிழக அரசியலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். 

மு.க.ஸ்டாலின் இந்து மதத்தைச் சார்ந்தவர்களையும் அவர்கள் பழக்க வழக்கங்களையும் மிகக் கேவலமாக விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்துக்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மூலம், தமிழகத்தில் 72 லட்சம் விவசாயிகள்  பயன்பெற உள்ளார்கள். விவசாயிகளுக்கு வழங்க உள்ள 6,000 ரூபாய் அதிகரிக்கப்படும் என அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். சாமானிய மக்கள் வீடு வாங்கும் கனவும் இந்த பட்ஜெட் மூலம் நிறைவேற உள்ளது.

மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்கள் மீது உள்ள வழக்கிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக  தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். சாரதா சிட் பண்ட்ஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சி.பி.ஐ அதிகாரி விசாரிக்கச் சென்றால், அதை எதிர்த்து மோசமான சூழலை அங்கு மம்தா பானர்ஜி உருவாக்கி வருகிறார். 2019-ல் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழகத்தில் பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுகிற சின்னக் கூட்டத்தைப் பற்றி பா.ஜ.க கவலைப்படவில்லை. யானையைச் சுண்டெலி எப்படித் தடுக்க முடியும்?  

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் மோடி வேண்டுமா அல்லது  கிளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும்  தலைவர்கள் வேண்டுமா என மக்கள் தீர்மானிக்க வேண்டும்" என்றவர், ``பா.ஜ.க-வுக்கு ஜன்னி வந்துள்ளதாக முரசொலியில் வந்துள்ளது குறித்த கேள்விக்கு ஜன்னி யாருக்கு என்பதை  ஸ்டாலின், வைகோ மற்றும் அதன் கூட்டணிகள் உணர வேண்டும். பா.ஜ.க-வுக்கு ஜன்னி எனக் கூறியவர்களுக்குத்தான் ஜன்னி பிடித்துள்ளது சனி பிரதமர் என்று கூறியதால்,  ஸ்டாலின் கனவில் இருக்கிறாரோ?" என்று கடுமையாக விமர்சித்தார்.