Published:Updated:

`உங்களின் சர்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை!’- ராகுலை சாடிய நிதின் கட்கரி

சத்யா கோபாலன்
`உங்களின் சர்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை!’- ராகுலை சாடிய நிதின் கட்கரி
`உங்களின் சர்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை!’- ராகுலை சாடிய நிதின் கட்கரி

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார்.

`உங்களின் சர்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை!’- ராகுலை சாடிய நிதின் கட்கரி

அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், ‘ முதலில் உங்கள் குடும்பங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிறகு நாட்டைக் கவனிக்கலாம். குடும்பத்தைச் சரியாக நடத்துபவரால் மட்டுமே நாட்டையும் சரியாக ஆளமுடியும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இவரின் பேச்சை டேக் செய்து ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். ‘ வாழ்த்துகள் கட்கரி ஜி. பா.ஜ.க-விலேயே நீங்கள் ஒரு ஆள்தான் மிகவும் தைரியசாலி. ரஃபேல் ஊழல், விவசாயிகளின் வேதனை, நிறுவனங்கள் அழிப்பு மற்றும் அனில் அம்பானி பற்றிய என் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்’ எனப் பதிவிட்டிருந்தார். 

`உங்களின் சர்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை!’- ராகுலை சாடிய நிதின் கட்கரி

இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள நிதின் கட்கரி, ‘தைரியத்துக்கான சான்றிதழ் உங்களிடமிருந்து எனக்குத் தேவையில்லை ராகுல் ஜி. ஆனால், எனக்கு மிகுந்த ஆச்சர்யம். காங்கிரஸ் தலைவரான நீங்கள் ஊடகங்கள் பதிவுசெய்துள்ள கருத்துகளை மாற்றியமைத்து எங்கள் அரசை விமர்சிக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

`உங்களின் சர்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை!’- ராகுலை சாடிய நிதின் கட்கரி

கட்கரியின் பதிலைச் சற்றும் கண்டுகொள்ளாத ராகுல் காந்தி அடுத்த சில மணி நேரங்களில் மீண்டுமொரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அதில், ` மன்னித்துக்கொள்ளுங்கள் கட்கரி ஜி. நான் மிக முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். 'வேலை வாய்ப்பு' என நான்கு முறை குறிப்பிட்டிருந்தார் ராகுல்.  

`உங்களின் சர்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை!’- ராகுலை சாடிய நிதின் கட்கரி