Published:Updated:

`மோடியின் செயல் சுதந்திர இந்தியாவுக்கே ஆபத்து!’ - நல்லகண்ணு சாடல்

`மோடியின் செயல் சுதந்திர இந்தியாவுக்கே ஆபத்து!’ - நல்லகண்ணு சாடல்
`மோடியின் செயல் சுதந்திர இந்தியாவுக்கே ஆபத்து!’ - நல்லகண்ணு சாடல்
`மோடியின் செயல் சுதந்திர இந்தியாவுக்கே ஆபத்து!’ - நல்லகண்ணு சாடல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26வது மாநில மாநாடு 11,12,13 ஆகிய  மூன்று நாள்கள் சேலம் தமிழ்ச் சங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில். “தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 83 வருட பாரம்பர்யமான சங்கம். இச்சங்கம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் போராடி வருகிறது. ஆனால், இந்தச் சூழ்நிலையிலும் விவசாயிகளின் பிரச்னை தீராத பிரச்னையாகவே இருந்து வருகிறது. தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல் மாறாக விவசாயிகளின் நிலங்களையும், டிராக்டர்களை ஜப்தி செய்கிறார்கள். அதே வேளையில் விஜய் மல்லையா, நீரவ்மோடி கடனைச் செலுத்தாமல் தப்பித்துப் போகிறார்கள்.

தமிழக அரசு கஜா புயலுக்காக மத்திய அரசிடம் 15,000 கோடி கடன் கேட்டது. ஆனால் மத்திய அரசு 1500 கோடி கொடுத்தது. மோடிக்குத் தமிழகத்தை பற்றி சிறிதும் கவலையில்லை. 8 வழிச் சாலையும், உயர் மின்னழுத்த கோபுரமும் தேவையில்லாத திட்டங்கள். இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். பாரதிய ஜனதா அரசு தற்போது விவசாயிகளுக்கு 6,000 கொடுப்பது நிரந்தரமானது அல்ல. தேர்தலுக்கான போலி அறிவிப்பு.

தமிழகத்தின் எந்தப் பிரச்னைக்கும் மத்திய அரசு கவலைப்படுவது போலத் தெரியவில்லை. மாநில அரசும் மத்திய அரசை நிர்பந்தம் செய்வதை நிறுத்தி விட்டது. தமிழகத்தில் காமராஜரைப் போல நல்லாட்சி தருவதாக மோடி சொல்கிறார். 

பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுத்ததில் ஊழல் நடந்திருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட் தேர்தல் பட்ஜெட்டாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் எழுத்துரிமை, பேச்சுரிமையைப் பறிக்கும் விதமாக மோடி செயல்படுகிறார். இது சுதந்திர இந்தியாவுக்கு ஆபத்து'' என்றார்.