Published:Updated:

``இதுவரை ஏன் ஓ.பி.எஸ்ஸை விசாரிக்கவில்லை" - கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

``இதுவரை ஏன் ஓ.பி.எஸ்ஸை விசாரிக்கவில்லை" - கே.பாலகிருஷ்ணன் கேள்வி!
``இதுவரை ஏன் ஓ.பி.எஸ்ஸை விசாரிக்கவில்லை" - கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

`மோடியை அழைத்து வந்து தமிழத்தின் திட்டங்களை துவக்கி வைக்கும் விழாவை நடத்துவது தமிழகத்தை அவமானப்படுத்தும் செயல். இதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது' என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

``இதுவரை ஏன் ஓ.பி.எஸ்ஸை விசாரிக்கவில்லை" - கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு வருகை தந்த கே.பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில் ``நடைபெற்ற பட்ஜெட் உரையில், `கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை மத்திய அரசு எப்படி வஞ்சித்து வந்தது' என்று தெரிவித்துவிட்டு, மோடியை அழைத்து வந்து திட்டங்களை துவக்குவது தமிழக மக்களுக்கு வரலாற்று ரீதியான அநீதியை தமிழக அரசு இழைத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடியோடு தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ள அ.தி.மு.க விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது. 

அத்தோடு, 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இடைத்தேர்தலை நடத்தினால், ஆளும் தமிழக அரசு 21 தொகுதிகளிலும் தோற்கும் என்ற பயமே இதற்கு காரணம். அதனால், தமிழகத்தில் ஆட்சியை இழக்க நேரிடும் என்ற பயமே காரணம். 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும்போது, சட்டமன்றம் நடைபெறுவது இதுவே வரலாற்றில் முதல்முறை. அத்தொகுதிகளின் மக்கள் பிரச்னைகளை தீர்க்க சட்டமன்ற உறுப்பினர் இல்லாதது, ஜனநாயக விரோதமான செயல். இது அரசியலமைப்புச் சட்டத்தையே காலில் போட்டு மிதிப்பதற்குச் சமமானது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி, மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அதையொட்டி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 2017-ல் அமைக்கப்பட்டு, இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விசாரணை நேர்மையாக நடக்கிறதா என்பதே மக்களின் சந்தேகமாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதலில் பேசியது இன்றைய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். அவரை இதுவரை ஏன் விசாரணை ஆணையம் விசாரிக்கவில்லை. முறைப்படி ஓ.பி.எஸ்தான் முதலில் விசாரித்திருக்கப்பட வேண்டும். அதேபோல, லண்டனில் இருந்து சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்போலோ மருத்துவர்கள் ஏன் இன்னும் விசாரிக்கப்படவில்லை. அத்தோடு, அப்போலோ மருத்துவமனை மருத்துவக் குழு அமைப்பதற்கு அனுமதி கேட்டதற்கு ஏன் மறுத்தது. 

``இதுவரை ஏன் ஓ.பி.எஸ்ஸை விசாரிக்கவில்லை" - கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

இன்று நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள் அப்போலோ மருத்துவ நிர்வாகம். ஏன் ஒரு நீதி விசாரணை கமிஷன் ஏன் இப்படி தடுமாறுகிறது?. ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்துள்ள உண்மையான காரணத்தை இந்த விசாரணை கமிஷன் வெளிக்கொண்டுவருமா என்பது ஒரு கேள்வியாக உள்ளது. கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை பற்றிய அரசு நேர்மையான பதிலை மக்களுக்குச் சொல்லத் தயங்குகிறது. கொடநாடு பங்களா மிகுந்த பாதுகாப்பு உள்ள பகுதி. அதன் உள்ளே கொள்ளை, கொலை சம்பவம் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருக்கும்போது, ஏன் இதுவரை அரசு வாக்குமூலம் பெற முயற்சிக்கவில்லை. 

அதேபோல, அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பது நிர்மலா தேவி விவகாரத்தில் ஜாமீன் வழங்க மறுத்து உண்மையை மறைப்பது போல இந்த சம்பவத்திலும் உண்மையை மறைக்க அரசு நினைக்கிறது. இதைப்பற்றி, அரசு பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதில் நேரடியாக முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று, அவர் பதவி விலக வேண்டும்" என்று அதிரடியாக தெரிவித்தார்.