Published:Updated:

சந்திரபாபு நாயுடு ஒரு நாள்; மம்தா இரண்டு நாள்! - டெல்லியைத் தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள்

சந்திரபாபு நாயுடு ஒரு நாள்; மம்தா இரண்டு நாள்! - டெல்லியைத் தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள்
சந்திரபாபு நாயுடு ஒரு நாள்; மம்தா இரண்டு நாள்! - டெல்லியைத் தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள்

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி மோசடி வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் அதிரடியாக நுழைந்து விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், காவல் ஆணையர் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு விரைந்த உள்ளூர் காவல் துறையினர், சிபிஐ அதிகாரிகளைக் கைதுசெய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இந்த விவகாரத்தால் தேசிய அளவில் திடீர் பரபரப்பு உண்டானது.

சந்திரபாபு நாயுடு ஒரு நாள்; மம்தா இரண்டு நாள்! - டெல்லியைத் தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள்

கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு விரைந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து. ‘ இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ எனக் கூறிவிட்டு மூன்று நாள்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில்  ‘ காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைதுசெய்யத் தடை விதித்தும், அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தன் தர்ணாவை முடித்துக்கொண்டார். 

சந்திரபாபு நாயுடு ஒரு நாள்; மம்தா இரண்டு நாள்! - டெல்லியைத் தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள்

இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ‘ கூட்டாச்சி மற்றும் அரசியலைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன் நிறுத்தி, இரண்டு நாள்கள் மீண்டும் தர்ணாவில் ஈடுபட உள்ளார். மம்தாவின் இந்தப் போராட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

முன்னதாக, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேஷ் பவனில் கடந்த திங்கள்கிழமை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு 12 மணி நேரம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரை அடுத்து, தற்போது மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், டெல்லி சற்று பரபரத்துள்ளது.