Published:Updated:

ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு - பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு - பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்
ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு - பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள ஹெ.கே என்ற கலைக் கல்லூரியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக, குஜராத் வட்கம் தொகுதியின் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அழைக்கப்பட்டுள்ளார். அது,  ஜிக்னேஷ் மேவானி படித்த கல்லூரி என்பதால், டாக்டர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் பற்றிப் பேச கல்லூரி முதல்வர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு - பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

பிறகு, இதுபற்றி அறிந்த கல்லூரி நிர்வாகம், ஜிக்னேஷ் மேவானியை  சிறப்பு விருந்தினராக அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. இதையடுத்து, அக்கல்லூரி முதல்வர் ஹேமந்த் குமார் ஷா, தன் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்துள்ளார். அவருக்கு ஆதரவாகக் கல்லூரி துணை முதல்வர் மோகன்பாயும் ராஜினாமாசெய்துள்ளார். அந்தக் கல்லூரியில் நடக்க இருந்த ஆண்டு விழாவும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு - பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

இதுதொடர்பாக முதல்வர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘ நாட்டில் உள்ள அனைவருக்கும் தங்களின் கருத்தை வெளியில் கூற முழு சுதந்திரம் உள்ளது. அந்த சுதந்திரம் ஜிக்னேஷ் மேவானிக்கும் உள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக அவரின் வருகையைக் கல்லூரி நிர்வாகம் நிராகரித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச்சம்பவம், குஜராத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், கல்லூரி நிர்வாகத்துக்கு அழுத்தம்கொடுத்து, ஜிக்னேஷ் மேவானியின் வருகையை பா.ஜ.க தடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.