Published:Updated:

`நோட்டு கொடுத்து நோட்டாவை வெல்ல வேண்டிய அவசியமில்லை' - தமிழிசை!

`நோட்டு கொடுத்து நோட்டாவை வெல்ல வேண்டிய அவசியமில்லை' - தமிழிசை!
News
`நோட்டு கொடுத்து நோட்டாவை வெல்ல வேண்டிய அவசியமில்லை' - தமிழிசை!

`நோட்டு கொடுத்து நோட்டாவை வெல்ல வேண்டிய அவசியமில்லை' - தமிழிசை!

'நோட்டு கொடுத்து நோட்டாவைவிட அதிக வாக்குகள் பெறுவது பெரிதல்ல' எனப் பிற கட்சிகளை பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சாடியுள்ளார்.

'மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வரவேண்டும்' என பி.ஜே.பி மகளிர் அணி சார்பாக மதுரையில் இருசக்கர வாகன யாத்திரை  நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன், தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரதமர் மோடி மதுரைக்கு வந்தது  மிகப்பெரும் எழுச்சியாக அமைந்தது. அவர் வருகைக்குப் பின், அதிக அளவு தொண்டர்கள் பி.ஜே.பி-யில் இணைந்துள்ளனர். இதனால் பி.ஜே.பி பெருவாரியாக வெற்றிபெறும். கூட்டணி என்பது அவசியமான ஒன்றாகும். எங்களது கூட்டணி மிகச்சிறந்த கூட்டணியாக அமையும்.

பி.ஜே.பி தலைவர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக்கொடி காட்டி எதிர்வினையாற்றும் நபர்களைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. பிரதமர் வருகை, தமிழகத்தில் நல்ல மாற்றத்தை நோக்கியது. மத்திய பட்ஜெட்டை பலரும் வரவேற்றுள்ளனர். பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் வரவேற்றுள்ளார். முரளிதர் ராவ், தமிழகப் பொறுப்பாளர்களை அறிவிப்பார்கள். பெரும் வாக்கு வங்கியாக பி.ஜே.பி வளர்ந்திருக்கிறது. தேர்தலையே சந்திக்காத கி.வீரமணி பி.ஜே.பி-யைப்  பற்றி பேசக்கூடாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நோட்டு கொடுத்து நோட்டாவை வெல்லவேண்டிய அவசியம் இல்லை. நோட்டு கொடுத்து நோட்டாவைவிட வாக்குகள் அதிகமாகப் பெறுவது பெரிதல்ல. ஆர்.கே நகர் தொகுதியில் தி.மு.க டெபாசிட் இழந்தது கி.வீரமணி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த தி.மு.க-வை டெபாசிட் இழந்த தி.மு.க என அழைக்கலாமா? தி.மு.க மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனப் பயணத்தைத்  தொடங்கிவைத்தார். 20-க்கும் மேற்பட்ட நபர்கள், பி.ஜே.பி மாநில மகளிர் அணித் தலைவி விஜயலெட்சுமி தலைமையில் இருசக்கர வாகனத்தில் தல்லாகுளம் பெருமாள் கோயில் முதல் உலக  தமிழ்ச்சங்கக் கட்டடம் வரை சென்று நிகழ்ச்சியை நிறைவுசெய்தனர்.