Published:Updated:

ஹைடெக் முறையில் பிரசாரம் - நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் களமிறங்கிய பா.ஜ.க

ஹைடெக் முறையில் பிரசாரம் - நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் களமிறங்கிய பா.ஜ.க
ஹைடெக் முறையில் பிரசாரம் - நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் களமிறங்கிய பா.ஜ.க

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காகக் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைவரும் மும்முரமாகக் களமிறங்கியுள்ளனர். இன்னொரு புறம் சில கட்சியினர் தற்போதிலிருந்தே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைடெக் முறையில் பிரசாரம் - நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் களமிறங்கிய பா.ஜ.க

இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. ஆனால் எப்படியேனும் பா.ஜ.கவை மட்டும் மீண்டும் ஆட்சியமைக்க விடக் கூடாது என மற்ற கட்சிகள் ஒன்றுகூடியுள்ளன. இதனால் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் உலக அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

பா.ஜ.க பல வழிகளில் தங்கள் கட்சியின் கொள்கைகளை மகளிடம் சேர்த்து வருகிறது. செல்போன் ஆப், சமூக வலைதளப் பக்கங்கள், திருமணப் பத்திரிகைகள், போஸ்டர்கள், பேனர்கள் எனப் பல முறைகளில் பிரசாரம் செய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் மீண்டும் மோடி என்ற டி-சர்டுகள், தொப்பிகள், பைகள், பேனாக்கள் போன்றவை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஹைடெக் முறையில் பிரசாரம் - நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் களமிறங்கிய பா.ஜ.க

தற்போது இதற்கு ஒரு படி மேலாகச் சென்றுள்ளது கர்நாடக பா.ஜ.க. அந்த மாநிலம் முழுவதும் பல இடங்களில் மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. `டீம் மோடி- 300’ (TeamModi) என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கால் சென்டருக்கு வாக்காளர்கள், பொதுமக்கள் போன் செய்து பா.ஜ.க தொடர்பாக உங்களுக்கு உள்ள சந்தேகங்கள், விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதற்காக இரண்டு தொலைபேசி எண்களும் தரப்பட்டன. இந்த மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெங்களூருவில் உள்ள கிரி நகரில்தான் முதன்முதலாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. 300 இடங்களில் மீண்டும் பா.ஜ.க வெற்றி பெறவேண்டும் என்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.