Published:Updated:

விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி கொலை

விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி கொலை
விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி கொலை
விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி கொலை

விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருப்பவர் முனுசாமி. இவர் கடந்த தி.மு.க. ஆட்சியில் சங்கராபுரம் பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

முனுசாமி நேற்று இரவு சங்கராபுரம் கடை வீதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது டாடா சுமோவில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சாராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

ரத்தவெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முனிசாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமயில் சேர்த்தனர். முனுசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

##~~##

இதையடுத்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரியல் எஸ்டேட் தொழிலில் முனுசாமிக்கும் கடும் போட்டி இருந்துள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

- நந்தகுமார்

படம்: சிலம்பரசன்