Published:Updated:

ஆறாக ஓடிய ரத்தம்! - காரணமான மவுலானா மசூத் அசாரை இந்தியா தண்டிப்பது எப்போது?

ஆறாக ஓடிய ரத்தம்! - காரணமான மவுலானா மசூத் அசாரை இந்தியா தண்டிப்பது எப்போது?
ஆறாக ஓடிய ரத்தம்! - காரணமான மவுலானா மசூத் அசாரை இந்தியா தண்டிப்பது எப்போது?

ந்தகார் விமானக் கடத்தல் நினைவில் இருக்கிறதா? 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காட்மண்டுவில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர். வானத்தில் எழும்பிய சில நிமிடங்களில் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர். பின்னர், துபாய் வழியாக ஆப்கானிஸ்தானின்  கந்தகார் நகருக்கு விமானத்தைக் கொண்டு சென்றனர். அப்போது, மத்தியில் பாரதிய ஜனதா அரசு இருந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தார். தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார் மற்றும் முஸ்டாக் அகமது, ஓமர் சையது ஷேக் ஆகிய தீவிரவாதிகளை விடுவிக்க நிபந்தனை விதித்தனர். 

வேறு வழியில்லாமல் இவர்கள் மூவரையும் மத்திய அரசு விடுவித்தது. அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஷ்வந்த் சிங் தனி விமானத்தில் மவுலானா மசூத் அசாரை கந்தகார் அழைத்துச் சென்று ஒப்படைத்தார். பின்னர், விமானம் விடுவிக்கப்பட்டது. அதே மவுலானா மசூத் அசார்தான் இப்போது இந்தியாவுக்கு வில்லனாக உருவாகி நிற்கிறார். ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி இயக்கத்தின் கமாண்டர் இவர்தான். இவரை சர்வதேச  தீவிரவாதி என அறிவிக்க இந்தியா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஐ.நா அமைப்பில் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளும் கூட மவுலானாவை சர்வதேச தீவிரவாதியாகவும் ஜெய்ஷ் இ முகமதுவை தடை செய்யப்பட்ட இயக்கமாகவும் அறிவிக்கத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. அப்போதெல்லாம் சீனா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து விடுகிறது.

தற்போது துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவே கொந்தளித்துக் கிடக்கிறது. சமூகவலைதளங்களிலும் மக்களிடையே கடும் கோபத்தைக் காண முடிகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் காஷ்மீரில் இறந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி என்ன பயன். தொடர்ந்து ராணுவ வீரர்கள் பலியாகிக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தேவை இல்லை. நேரடி தாக்குதல் நடத்தி  மக்கள் அனைவரும் அறியும் வகையில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதே தகுந்த பதிலடியாக இருக்கும் என்கிற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.