Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

HAJAMYDEENNKS

சீமான் சீரியசா காமெடியாகப் பேசுவார்

அன்புமணி காமெடியா சீரியசாகப் பேசுவார்! 

SubashiniBA

ஜி.எஸ்.டி., ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்புகள் வெற்றி என்றால் அதைச் சொல்லி வாக்கு கேட்கும் தைரியம் ஏன் பி.ஜே.பி-க்கு இல்லை!

ajmalnks

அ.தி.மு.க-வின் எட்டு ஆண்டுகால ஆட்சியில், பெண்கள் முகம்சுழிக்கும் அளவுக்கு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை - ராமதாஸ்.

# டாக்டர் அய்யா பொட்டியைப்  பார்த்தவுடன் பொள்ளாச்சியைப் பக்கத்து ஸ்டேட்டுக்குத் தாரை வார்த்துட்டாரு!   

ஆஹான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

HAJAMYDEENNKS

ஒருகாலத்துல முதல்வர் வேட்பாளராக இருந்த அன்புமணி இப்ப முதல்வருக்குப் பக்கத்துல நிற்கிற வேட்பாளராக மாறியதுதான், பா.ம.க சொன்ன மாற்றம்...  முன்னேற்றம்போல! 

ItsJokker

ஆமா, மிரட்டல் ட்வீட் போட்டியே, தேடிப்பார்த்தா காணும்?

எல்லாரும் மிரட்டினாங்க, அதான் பயந்துபோய் டெலிட் பண்ணிட்டேன்..

அட, பயந்தாங்கொள்ளி.. 

RahimGazzali

மண்புழுபோல் விவசாயிகளின் நண்பனாக நான் இருக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

# மண்புழுவுக்கும் முதுகெலும்பு இல்லை. உங்களுக்கும் முதுகெலும்பு இல்லை. இந்த ஒரு விஷயத்தில்தான் மண்புழுவோடு நீங்க ஒத்துவருவீங்க தலைவரே... 

nithya_shre

ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால், படப்பை வந்தார்...

படப்பையில் கூட்டம் இல்லாததால், ஒரகடம் வந்தார்...

ஒரகடத்தில் கூட்டம் இல்லாததால், மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் வந்தார்...

ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் சென்னைக்கே திரும்பிச் சென்றார். # மக்கள் நீதி மய்யம் 

pencil_tweets


அடிக்கடி சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்யும் தி.மு.க தேவையா?

- சூட்கேஸ்மணி

அதெல்லாம் சபைக்குப் போறவங்க பண்றது ஏட்டைய்யா, நாமதான் பார்லிமெண்டுக்குப் போனதே இல்லையே, நமக்கு தர்மபுரி தேவையா? 

gips_twitz

ஜெயலலிதா இருந்தப்ப கடல் கன்னி ஷோ மாதிரி இருந்த பிரசாரக் கூட்டம், எடப்பாடி வந்தபிறகு கிரேட் கிரிகாலன் ஷோ மாதிரி ஆயிருச்சு.

ஒருவேளை மேஜிக் தெரியலையோ
 
thoatta

டி.டி.வி ரேஞ்சுக்கு சூட்கேஸ் பொட்டி சின்னம் தராமல், சின்ன சைஸ் பரிசு பொட்டி தந்தத் தேர்தல் ஆணையத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!