Published:Updated:

சிறையில் இரவு தூக்கமில்லாமல் தவித்த சஞ்சய் தத்!

சிறையில் இரவு தூக்கமில்லாமல் தவித்த சஞ்சய் தத்!
சிறையில் இரவு தூக்கமில்லாமல் தவித்த சஞ்சய் தத்!
சிறையில் இரவு தூக்கமில்லாமல் தவித்த சஞ்சய் தத்!

மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக நேற்று பிற்பகல் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைந்தார் சஞ்சய் தத்.

பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு தடா கோர்ட் அனுமதி அளித்தது.

மேலும் 6 ஜோடி உள்ளாடைகள், ஒரு குர்தா, ஒரு ஜோடி பைஜாமா, இரண்டு வாசிக்கும் கண்னாடிகள், இரண்டு பார் சோப்புகள், இரண்டு டூத் பிரஷ்கள், ஒரு டூத் பேஸ்ட், 2 பாட்டில் ஷாம்பு, ஒரு ஜோடி ரப்பர் செருப்பு, உடலில் தடவும் கொசு மருந்து ஜெல் 3 டியூப்புகள், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் ஹனுமான் புத்தகங்கள் தலா ஒன்று ஆகியவற்றை எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்த சலுகை தொடருமா என்பதை சிறை அதிகாரிகள் பின்னர் முடிவு செய்வார்கள்.

##~~##
இதனிடையே தனக்கு புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதால், சிறையில் மின்னணு சிகரெட்டுகளை புகைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சஞ்சய் தத் மனு செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். சிறையில் சுதந்திரமாக நடமாடவும், தன் குடும்பத்தினர் தன்னை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக தடா கோர்ட் இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்நிலையில் சஞ்சய் தத்தின் நேற்றைய முதல்நாள் சிறைவாசத்தின் இரவு அனுபவம் தொடர்பான தகவல்கள் சிறை வட்டாரம் மூலம் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு 11 மணியளவில் சிறையில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சஞ்சய் தத் அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர், குடிப்பதற்கு அவர் தண்ணீர் கேட்டார். சிறை அதிகாரிகள் ஒரு பாட்டிலில் தண்ணீர் தந்தனர்.
அதன் பின்னர், தூங்கச் சென்ற சஞ்சய் தத், இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்ததாகவும், சில முறை எழுந்து உட்கார்ந்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்ததாகவும் சிறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தடா கோர்ட்டில் இருந்து ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு சென்றபோது, சஞ்சய் தத் வேனில் தேம்பித் தேம்பி அழுததாக பாதுகாப்புக்காக வேனில் சென்ற போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே சஞ்சய் தத் விரைவில் புனே எரவாடா சிறையில் அடைக்கப்படுவார் எனத்தெரிகிறது.இருப்பினும் இதுகுறித்து போலீசார் வாய் திறக்க மறுக்கின்றனர்.